உப்பு நீர் முதலைகள்!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உப்பு நீர் முதலைகள்!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பிதர்கனிகா தேசிய பூங்கா உள்ள பகுதியில் 103 முதலை வாழிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 1,757 முதலைகள் இங்கு உள்ளன.

நாட்டில் உள்ள உப்புநீரில் வாழும் முதலைகளின் மொத்த எண்ணிக்கையில் இது 70 சதவீதமாகும்.

முதலைகள் எந்த இடையூறுமில்லாமல் தங்கி இனவிருத்தி செய்து கொள்வதற்காக ஒவ்வோராண்டும் இந்த தேசிய பூங்கா மே 31- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக இந்த தேசிய பூங்கா பகுதிக்கு மக்கள் வருவது நீண்ட நாள்களாகவே தடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ளதைப் போன்ற முதலைகள் மேற்கு வங்காளத்தின் சுந்தரவன காடுகளிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com