கியூரியாசிட்டி - ஆர்வம் குறையவில்லை!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களில் கியூரியாசிட்டி விண்கலத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. 
கியூரியாசிட்டி - ஆர்வம் குறையவில்லை!
Updated on
1 min read


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களில் கியூரியாசிட்டி விண்கலத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. 
2011-ஆம் ஆண்டு நவ. 26-ஆம் தேதி ஏவப்பட்டு 2012, ஆக. 6-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய அந்த விண்கலம் 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இப்போது களிமண் கனிமங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கும், சல்பேட்டுகள் எனப்படும் உப்புத் தாதுக்கள் நிறைந்த பகுதிக்கும் இடையே தனது ஆய்வுப் பணியைத் தொடர்கிறது.
"ஒரு காலத்தில் ஈரமாக இருந்த இந்தக் கிரகம் இன்றைய வறண்ட கிரகமாக எப்படி மாறியது, அது நிகழ்ந்த பின்னரும் வாழ்க்கைச் சூழல் எத்தனை காலம் நீடித்தது என கேல் பள்ளத்தாக்கின் பாறைகள் மூலம் தெரிய வரலாம்' என கியூரியாசிட்டி ரோவரை இயக்கும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தாக்கில் ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர் ஒரு காலத்தில் இருந்தபோது உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததா என்பதைப் பிரதானமாக ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர், இதுவரை 26 கி.மீ. பயணம் செய்துள்ளது. கிரகத்தின் தரைப்பரப்பில் பாறைத் துகள்களை சேகரிப்பதற்காக 32 முறை "ட்ரில்' செய்துள்ளது.
கேல் பள்ளத்தாக்கில் ரோவர் சேகரித்த மண் மாதிரிகள் பற்றிய சமீபத்திய ஆய்வு, இப்போது தரிசாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் வாழ்க்கைச் சூழல் செழிப்பாக இருந்தது என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இக்கிரகத்தில் ஏரி இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், அந்த ஏரி உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருந்ததா என்பது துல்லியமாகத் தெரியவில்லை. கியூரியாசிட்டி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆர்வம் எனப் பொருள். செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஆர்வத்தைத் தூண்டத்தான் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com