எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நனவான விண்வெளி சுற்றுலாக் கனவு!

விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் மட்டும்தான் செல்ல வேண்டுமா என்ன? பொதுமக்களும் செல்லும் கனவை நனவாக்கியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த "வர்ஜின் கலாக்டிக்' என்ற தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனம்.

News image
Updated On :20 ஜூலை 2021, 12:30 am

விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் மட்டும்தான் செல்ல வேண்டுமா என்ன? பொதுமக்களும் செல்லும் கனவை நனவாக்கியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த "வர்ஜின் கலாக்டிக்' என்ற தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனம்.

அமேசான் நிறுவனர் பெசோஸ் விண்வெளி சுற்றுலா முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதை முந்தி சாதித்துள்ளது, வர்ஜின் கலாக்டிக் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ரிச்சர்ச் பிரான்ஸனும் கோடீசுவரர்தான். 71 வயதாகும் இவர், இரு விமானிகள், தனது நிறுவனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்களுடன் "ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி' என்ற விண்வெளி ஓடம் மூலம் கடந்த 11-ஆம் தேதி விண்வெளிக்குச் சென்று வந்தார். இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா (34) என்பவரும் உண்டு. இவர் ஆந்திர மாநிலம், குண்டூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். நாசாவில் சேர்ந்து விண்வெளி வீராங்கனையாகும் லட்சியத்துடன் இருந்த ஸ்ரீஷா, அந்த விருப்பம் நிறைவேறாத நிலையில், விண்வெளி சுற்றுலா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

வழக்கமாக விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்படும். ஆனால், "ராக்கெட் விமானம்' எனப்படும் இரட்டை விமானத்தின் அடிப்பகுதியில் யூனிட்டி என்ற விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டு அதனுள் பிரான்ஸன் உள்ளிட்ட 6 பேரும் ஏறிக்கொண்டனர். தரையிலிருந்து சுமார் 13 கி.மீ.
உயரத்துக்குச் சென்றதும் இந்த விண்வெளி ஓடம் விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விண்வெளியை நோக்கிச் சென்றது. புவியீர்ப்பு விசையைக் கடந்து சுமார் 88 கி.மீ. உயரத்தை அடைந்து விண்வெளியின் வாசலைத் தொட்டது, அந்த விண்வெளி ஓடம். சுமார் 4 நிமிஷங்கள் விண்வெளியில் எடையற்ற தன்மையை ஓடத்திலிருந்தவர்கள் உணர்ந்தனர். அங்கிருந்து பார்க்கும்போது தெரிந்த பூமியின் வளைவான தோற்றத்தை ஓடத்தின் ஜன்னல்கள் வழியே கண்டு ரசித்தபின்னர், விண்வெளி ஓடம் மூலம் அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.

பயணிகளை வர்த்தகரீதியாக விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு பிரான்ஸனின் வர்ஜின் கலாக்டிக் நிறுவனம் அடித்தளம் அமைத்துள்ளது. சோதனைரீதியான இப்பயணம் தொடங்குவதற்கு முன்னதாகவே 500-க்கும் மேற்பட்டோர் விண்வெளி சுற்றுலா செல்வதற்கு இந்நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்குச் செல்ல விரும்பிய பிரான்ஸனின் கனவுஅவரது 71 வயதில் நனவாகியுள்ளது. "விண்வெளி அசாதாரணமானது; பிரபஞ்சம் அற்புதமானது. மக்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?' என ஆர்வத்துடன் கேட்கிறார் பிரான்ஸன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.