வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 318
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரின் மகன் போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது அவர் அன்று நடந்த சம்பவங்களை விளக்கும்போது...
propositions உடைய பயன்பாடு குறித்து சில ஐயங்களை கணேஷ் எழுப்புகிறான். அதில் இருந்து நாம் சில விசயங்களைக் கற்றுக் கொள்வோமா?
கணேஷ்: I am in my home. சரியா?
ஜூலி: குத்துமதிப்பா சொல்லுறியா இல்ல... நிஜமா புரிஞ்சிக்கிட்டு சொல்லுறியா?
கணேஷ்: நான் வழக்கமா எப்படி சொல்லுவேனோ, அப்படிச் சொல்லுறேன்.
ஜூலி: இதில ஒரு முக்கியமான விசயத்தை நீ கவனிக்கணும். I am home என்றே சொல்லலாம். ஆனால் ஒரு proposition ஐப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால் I am at home என்று சொல்லலாம். ஆனால் If you are at my house you can find me in my room என்று சொல்லலாம்.
கணேஷ்: குழப்பாதே.
ஜூலி: சிம்பிள் தான். எப்படியும் வீட்டுக்கு ஹற் பயன்படுத்துகிறோம். அதற்குள் ஒரு அறைக்குள்ளே நீ இருப்பதை உணர்த்துவதற்காக in ஐப் பயன்படுத்த வேண்டும்.
கணேஷ்: சூப்பர் இப்போ எல்லாமே தெளிவாப் புரிஞ்சிருச்சு.
ஜூலி: அப்படியா? உன் சைக்கிள் சாவி எங்கே இருக்கு?
கணேஷ்: சாவி... அது வந்து என் பாக்கெட்டில் இருக்குது.
ஜூலி: இதை எப்பிடி இங்கிலிஷ்ல சொல்லுவே?
கணேஷ்: The key is inside my pocket.
ஜுலி: இல்லை, அங்கே in - ஏ தாராளம். The key is in my pocket. The purse is in my pocket. அதே போல சாவி உன் பைக்குள் இருக்கிறது என்பதை the key is in my bag என்று சொல்லலாம்.
கணேஷ்: அப்போ inside? அது தப்பா?
ஜூலி: அதுவும் ஒரு proposition தான். ஆனா அதோட பொருளும் பயன்பாடும் ண்ய் இல் இருந்து வேறுபட்டது. உதாரணமா, நீ ஒரு அறைக்குள் இருக்கிறாய் என்பதை I am in the room என்று சொன்னாலே போதும். ஆனால் நீ பெட்டி போன்ற ஒரு அமைப்புக்குள், நான்கு சுவர்களுக்கு உள்ளே, ஒரு கூரையின் கீழிருக்கிறாய் என்பதைக் காட்ட insideஐ பயன்படுத்தலாம். அதாவது for a thing or a person situated with the boundaries or confines of something.. புரிகிறதா?
கணேஷ்: கிட்டத்தட்ட.
ஜூலி: The TV is playing inside the house என்றால் வீட்டுக்குள் இருந்து ஒரு டிவி ஓடுகிறது என்று பொருள். அதாவது நீ வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு அதைச் சொல்லும் போது inside சரியாக இருக்கும். அதே நேரம் நீ வீட்டுக்குள் இருக்கும் போது the tv is in my house என்றோ in my room என்றோ சொன்னால் போதும்.
அமைச்சரின் மகன்: ஆஹா... எவ்வளவு அழகாக propositionகளை இந்த நாய் விளக்கி விட்டது. நாம் இதற்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும். ஆமா உன் பேரு என்ன?
ஜூலி: I am Julie
அமைச்சரின் மகன் (ஏமாற்றத்துடன்): கிறிஸ்டியனா நீ?
மன்னர் வீரபரகேசரி: டேய் நாய்க்கு ஏதுடா சாதி, மதம் எல்லாம்?
அமைச்சரின் மகன்: மன்னியுங்கள் மன்னா...
மன்னர் வீரபரகேசரி: Let's continue the inquest.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...