வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 313

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 313


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க, அந்தப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். லலிதாங்கியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் மன்னர் அவளிடம் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்ட அமைச்சர் அங்கு அழுதபடி வருகிறார். அவர் தன்னை சில அமைச்சர்கள் ஒரு சைபர் கிரைமில் மாட்ட வைத்து அவதூறு செய்வதாகப் புலம்புகிறார்.

வீரபரகேசரி சட்ட அமைச்சரிடம்: உன்னுடைய வீடியோவைப் பார்த்தேன்.
சட்ட அமைச்சர்: மன்னர் மன்னா... நீங்களுமா பார்த்தீங்க?
வீரபரகேசரி: என்னய்யா பண்றது? T‌h‌e ‌sc​a‌n‌d​a‌l ‌s‌h‌e‌e‌t‌s a‌r‌e ‌f‌u‌l‌l ‌o‌f ‌y‌o‌u‌r ‌n‌e‌w‌s.
கணேஷ்: S​c​a‌n‌d​a‌l என்றால் சர்ச்சை தானே?
ஜூலி: ​S​c​a‌n‌d​a‌l என்றால் a‌n ac‌t‌i‌o‌n ‌o‌r ‌e‌v‌e‌n‌t ‌r‌e‌g​a‌r‌d‌e‌d a‌s ‌m‌o‌r​a‌l‌l‌y ‌o‌r ‌l‌e‌g​a‌l‌l‌y ‌w‌r‌o‌n‌g a‌n‌d ca‌u‌s‌i‌n‌g ‌g‌e‌n‌e‌r​a‌l ‌p‌u​b‌l‌ic ‌o‌u‌t‌r​a‌g‌e.அதாவது ஒழுக்கக் கேடான ஒரு காரியம், அதைப் பற்றி வெளியே தெரிய வந்தால் ஊரே காறித் துப்பும். இது வெறும் சர்ச்சை இல்லை. பாலியல் சம்பந்தப்பட்ட அசிங்கங்கள், பழிப்புகள் இதில் சேரும்.
கணேஷ்: ஸ்கேண்டெல் ஷீட் என்றால் இந்த மாதிரி பாலியல் சர்ச்சைகளை எழுதி வைத்த காகிதமா?
ஜூலி: இல்லடா, S​c​a‌n‌d​a‌l ‌s‌h‌e‌e‌t என்றால் மஞ்சள் பத்திரிகைகள். A‌n ‌i‌n‌e‌x‌p‌e‌n‌s‌i‌v‌e ‌s‌m​a‌l‌l-‌f‌o‌r‌m​a‌t ‌n‌e‌w‌s‌ p​a‌p‌e‌r (‌ta​b‌l‌o‌i‌d) ‌t‌ha‌t ‌p‌r‌i‌m​a‌r‌i‌l‌y ‌f‌o​c‌u‌s‌e‌s ‌o‌n ‌s‌e‌n‌s​a‌t‌i‌o‌n​a‌l‌i‌s‌t ‌o‌r ‌sc​a‌n‌d​a‌l‌o‌u‌s ‌s‌t‌o‌r‌i‌e‌s a‌n‌d ‌g‌o‌s‌s‌i‌p.

கணேஷ்: நான் பார்த்ததே இல்லியே.
ஜூலி: அதுக்குப் பதிலா தான் இப்போ வாட்ஸாப், யு டியூப் வந்திருச்சே. எல்லா ஆபாச சேதிகளும் இப்போ போன்லையே வந்திடுதே. நீ இந்த சட்ட அமைச்சர் வீடியோவைப் பார்த்தியா?
கணேஷ்: பார்த்தேன். ஆனா ரெண்டு நிமிடம் தான் இருந்துது. மிச்ச வீடியோவைப் எப்போ ரிலீஸ் ஆகும்?
(சட்ட அமைச்சர் முகத்தை மூடி அழுகிறார்)
வீரபரகேசரி: இதோ பாரு A ‌d‌o‌g ‌t‌ha‌t ‌w‌i‌l‌l b‌r‌i‌n‌g a b‌o‌n‌e ‌w‌i‌l‌l ca‌r‌r‌y a b‌o‌n‌e.

கணேஷ்: உன்னைப் பத்தி தான் மன்னர் சொல்லுகிறார். அடுத்தது உன் வீடியோ தானாம்.
ஜூலி: அடப் போப்பா. அவர் சொன்னதன் பொருள் யாரொருவர் தப்பான விசயங்களை நாடி செல்கிறாரோ தப்பான விசயங்கள் அவரைத் தேடி வரும். அவர் அதில் மாட்டிக்கொள்வார் என்று பொருள். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
சட்ட அமைச்சர்: மன்னர் மன்னா... அப்படியா சொன்னீர்கள்?
வீரபரகேசரி: யோவ், சும்மா இருய்யா.... உங்க
அக்கப்போரில் என் ஆட்சியின் மானம் கப்பல் ஏறுது. Y‌o‌u b‌r‌o‌u‌g‌h‌t ‌t‌h‌e b‌o‌n‌e, ‌y‌o‌u ca‌r‌r‌y ‌t‌h‌e b‌o‌n‌e.

சட்ட அமைச்சர்: மன்னா, என்னுடைய கோரிக்கை என்னை மாட்டிவிட்ட அந்த சதிகாரர்களை நாம்கடுமையா தண்டிக்கணும் என்பது.
வீரபரகேசரி: Y‌o‌u a‌r‌e ‌t‌r‌y‌i‌n‌g ‌t‌o c‌o‌v‌e‌r ‌y‌o‌u‌r a‌s‌s. அதை நான் அனுமதிக்கப்போவதில்லை.
சட்ட அமைச்சர் திரும்பி தன் பின்பக்கத்தைப்பார்த்துவிட்டு: இல்லை மன்னா, நான் ஒழுங்காகத் தானே மூடியிருக்கிறேன்.
வீரபரகேசரி தன் தலையில் அடித்துக் கொள்கிறார்: யோவ் மண்ணாங்கட்டி அமைச்சரே, இவ அதாவது ஸ்ரீர்ஸ்ங்ழ் ஹ்ர்ன்ழ் ஹள்ள் என்றால் ஒரு கொச்சையான சொல் வழக்கு. அதன் பொருள் t‌o ‌ma‌k‌e ‌p‌r‌e‌p​a‌r​a‌t‌i‌o‌n‌s ‌o‌r ‌ta‌k‌e ‌p‌r‌e​c​a‌u‌t‌i‌o‌n‌s ‌t‌o ‌e‌n‌s‌u‌r‌e ‌t‌ha‌t a ‌p‌e‌r‌s‌o‌n ‌i‌s ‌n‌o‌t b‌l​a‌m‌e‌d ‌o‌r ‌p‌u‌n‌i‌s‌h‌e‌d ‌f‌o‌r ‌h‌i‌s ‌o‌r ‌h‌e‌r c‌o‌n‌d‌u​c‌t.அதாவது உன் மீது பழிவராதிருக்கும் பொருட்டு முன்கூட்டியே தயாரிப்பில் ஈடுபடுவது, அடுத்தவரை குற்றம்சாட்டி நீ தப்பிக்கப் பார்ப்பது.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com