தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செல்லிட பேசி... வாட்ஸ்ஆப்  செயலிழப்பு!

செல்லிட  பேசிகள் வந்ததில் இருந்தே அனைவரின் அன்றாடப் பணிகளில் பல்வேறு மாற்றங்களை அது ஏற்படுத்திவிட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2021, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்

செல்லிட பேசிகள் வந்ததில் இருந்தே அனைவரின் அன்றாடப் பணிகளில் பல்வேறு மாற்றங்களை அது ஏற்படுத்திவிட்டது. காலையில் அலாரம் வைத்து எழுவதுடன், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தோம், எத்தனை முறை நடந்தோம், எந்த அளவுக்குச் சாப்பிட வேண்டும், எந்த வழியில் அலுவலகத்துக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்என்பன போன்ற பல தகவல்களை நொடிக்கு நொடி செல்லிட பேசிகளில் இணைய வசதியின் மூலம்
பெற்றுவிடலாம்.

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இந்த செல்லிட பேசிகளின் தொழில்நுட்பங்களும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. பழைய செல்லிட பேசிகளின் தொழில்நுட்பம் பழையதாகி விடும்போது, அவை நிகழ்காலத்தின் இணையவழிப் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு உதவியாக இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் பழைய செல்லிட பேசிகளில் வாட்ஸ்ஆப் இயக்கம் தடைசெய்யப்படும் நிகழ்வு.

உலகில் மிகக் குறைந்த அளவிலேயே இதுபோன்ற பழைய செல்லிட பேசிகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றில் உள்ள பழைய மென்பொருளுக்கு ஏற்ப அப்டேட்களை நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.

அதன்படி ஆன்ட்ராய்டு 4.0.3. ஐஸ் கிரீம் சான்ட்விச், ஐஓஎஸ் 9, கே.ஏ.ஐ.ஓ.எஸ் 2.5.0 வெர்ஷனில்இயங்கும் செல்லிட பேசிகள் இயங்காது என்று வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 11, கேலக்ஸி டிரன்ட் 11, கேலக்ஸி கோர், கேலக்ஸி ஏஸ்2, எல்ஜி ஆப்டிமஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 6 எஸ், சோனி எக்ஸ்பிரியா நியோ, எக்ஸ்பிரியா ஆர்க், ஆல்கடெல், லினோவா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு 4.0.3. ஐஸ் கிரீம் சான்ட்விச் வெர்ஷனில் இயங்கும்செல்லிட பேசிகளில் வாட்ஸ்ஆப் நவம்பர் 1-ஆம் தேதி முதல் இயங்காது என அந்த நிறுவனம்அறிவித்துள்ளது.

ஐஓஸ் பயன்பாட்டாளர்கள் தங்கள் செல்லிட பேசி எந்த வெர்ஷனில் இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள போன் செட்டிங்ஸில் சென்று ஜெனரல்-இன்பர்மேஷன் ஆப்சன்-சாப்ட்வேர் என்பதை தேர்வுசெய்யவேண்டும்.

ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் செட்டிங்ஸ்-எபோட் போன் என்பதை கிளிக் செய்து உங்கள்செல்லிட பேசி எந்த வெர்ஷனில் இயங்குகிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற பழைய செல்லிட பேசிகளுக்கு நவம்பர் 1-முதல் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்கள் கிடைக்காது. இதன் மூலம் அந்த பழைய வகை செல்லிட பேசிகளில் வாட்ஸ்ஆப் மெல்ல மெல்ல செயலிழந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.