ஜூம் செயலி... புதிய சேவைகள்!

கரோனா தொற்று பரவத் தொடங்கிய வேகத்துக்கு இணையாக, உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் "ஜூம்' இணையவழி விடியோ கால் செயலியின் பயன்பாடும் பரவத் தொடங்கியது. 
ஜூம் செயலி... புதிய சேவைகள்!

கரோனா தொற்று பரவத் தொடங்கிய வேகத்துக்கு இணையாக, உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் "ஜூம்' இணையவழி விடியோ கால் செயலியின் பயன்பாடும் பரவத் தொடங்கியது. 
வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொள்ள மட்டும் முன்பு பயன்பட்டு வந்த "ஜூம்', தற்போது உள்ளூர் பள்ளி, கல்லூரிகளிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இவை எல்லாம் இலவச பயன்பாடாக உள்ளன.
பெரும் நிறுவனங்களில், உலகின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் ஏராளமானவர்கள் விடியோ கால் மூலம் இணைந்து பேச தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி வருகின்றன.
இணையவழி விடியோ கால் சேவையில் முன்னணி நிறுவனமான "ஜூம்' புதிய சேவைகளை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
"ஜூம்' விடியோ காலில் பேசுபவர்களின் 12 மொழிகளை உடனடியாக மொழி பெயர்ப்பு செய்யும் சேவையும், பயன்பாட்டாளர்கள் பேசும் 30 மொழிகளின் 
உடனடி எழுத்து வடிவத்தை அளிக்கும் சேவையும் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பிற நாடுகளில் இருந்து பேசுபவர்களின் மொழியாக்கத்தை அறிந்து கொள்ள இந்த சேவை உதவும். இதற்காக   ஜெர்மனியைச் சேர்ந்த "கைட்ஸ்' மொழிபெயர்ப்பு நிறுவனத்தை "ஜூம்' அண்மையில் வாங்கியது.
உடனடி மொழிபெயர்ப்புக்காக "ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்', "மெஷின் லேர்னிங்' (எம்எல்) தொழில்நுட்பத்தை இணைத்து "ஜூம்' நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
மேலும் கையால் திரையில் எழுத்து வடிவில் எழுத உதவும் "வைட் போர்ட்' சேவையையும் "ஜூம்'   அறிமுகம் செய்துள்ளது. இதனை அனைத்துப் பயன்பாட்டாளருக்கும் விடியோ கால் சேவையின்போதே பயன்படுத்துவதை ஊக்குவிக்க "ஜூம்' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
கரோனா பரவல் முடிந்த பிறகு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் திரும்பினாலும், அவர்கள் ஒன்றுகூடாமல் தங்கள் அறையில் இருந்தவாறு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் வகையிலான புதிய சேவைகளையும் "ஜூம்' அறிமுகம் செய்ய ஆய்வுகளை நடத்தி வருகிறது.
மேலும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு பெரிய திரைகள் இல்லாமல், சாதாரண வெள்ளைச் சுவரில் ரிமோட் பயன்பாட்டுடன் வரைந்து எழுதி காண்பிக்கும் வகையிலான புதிய "விஆர் வைட் போர்ட்' சேவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com