தொல்லியல் படிக்கலாம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், சுவடியியல், கல்வெட்டியலில் ஆராய்ச்சிப் படிப்புகளை எளிதாகப் படிக்கலாம்.
தொல்லியல் படிக்கலாம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், சுவடியியல், கல்வெட்டியலில் ஆராய்ச்சிப் படிப்புகளை எளிதாகப் படிக்கலாம்.

தமிழகம் நீண்ட வரலாற்றை உடையது. அதில், எழுத்தாணிகளைக் கொண்டு இலக்கணம், வரலாறு, சோதிடம், மருத்துவம், கணக்குகள் எனப் பல ஆவணங்களை முன்னோர்கள் எழுதிப் பாதுகாப்பாக வைத்தனர். சுவடி நூலகங்கள், பெரிய வீடுகள், அரண்மனைகள், கோயில்கள் இருந்தன. 

1981-ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம் 10 ஆயிரம் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வருகிறது. 

நம் முன்னோர் பற்றிய பண்பாடு, வரலாறு இதன் மூலம் அறிய முடிகிறது. மீதமுள்ள சுவடிகளை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர ஓலைச் சுவடியல் படிப்பு உருவாக்கப்பட்டது. சான்றிதழ், பட்டயம், பட்டம், ஆராய்ச்சிப் படிப்புகள் வரை ஓலைச்சுவடி இயல் துறை மூலம் நடத்தப்படுகிறது.

இதைப் படித்தால் ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், படிப்பகம், கல்வி, ஆராய்ச்சி மையங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். இதில் படித்த யாரும் வேலையின்றி இல்லை.

புதுதில்லியில் உள்ள தேசிய சுவடிகள் இயக்ககம் சார்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடி துறையில் சுவடிகள் பாதுகாப்பு மையம் ஒன்றை நிகழாண்டில் நிறுவியுள்ளது.

இதன்வாயிலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓலைச்சுவடிகளைத் திரட்டவும், அவற்றைப் பாதுகாக்கவும் நிதியுதவி அளிக்கிறது. இந்தப் பணிகளில் சுவடி இயல் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பல்கலைக்கழக முகவரி: தமிழ்ப் பல்கலைக்கழம், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613010.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com