நிகழ்ச்சி மேலாண்மைப் படிப்பு!

இன்று சிறு குழந்தையின்  பிறந்த  நாளாகட்டும்,  பெரிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு  விழா ஆகட்டும்,  
நிகழ்ச்சி மேலாண்மைப் படிப்பு!


இன்று சிறு குழந்தையின் பிறந்த நாளாகட்டும், பெரிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆகட்டும், அந்த விழாவைத் திட்டமிட்டு சிறப்பாக நடத்த வேண்டும். எப்படி நிகழ்ச்சியை அழகாய், அருமையாய் ஒருங்கிணைத்து, திறமையாக நடத்துவது என கற்றுத் தருவதுதான் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் நிகழ்ச்சி மேலாண்மை படிப்பாகும்.

என்ன பாடம் கற்பிக்கப்படுகிறது?

எந்த நிகழ்ச்சி நடைபெற போகிறது, எங்கு நடைபெறப் போகிறது? எந்த வரிசை
முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்? நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்பவர்கள் யார்? நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது முதல் பங்கேற்பாளர்களை அழைத்துக் கொண்டு வருவது வரை எல்லாவற்றையும் முறைப்படி திட்டமிட்டு, நிகழ்ச்சி தொடர்பான அனைத்துப் பணிகளையும் முறைப்படி பிரித்து, யார் யார் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்வது வரை எல்லாப் பணிகளும் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்ததே.

நிகழ்ச்சியின் ஒலி-ஒளி அமைப்பு முதல் நிகழ்ச்சியில் அளிக்கப்படுகிற உணவு, பானங்கள், பரிசுப் பொருள்கள் வரை அனைத்தும் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்ததே.

நிகழ்ச்சியை நடத்துபவர் ஒதுக்கும் நிதியின் அளவுக்கேற்ப நிகழ்ச்சியின் அனைத்து செயல்களும், நடைமுறைகளும்தீர்மானிக்கப்பட வேண்டும்.

நிகழ்ச்சி மேலாண்மையாளரிடம் நிகழ்ச்சிக்கான பொறுப்பை அளித்தால் போதும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும். இதற்கான படிப்பை வழங்குவதுதான் நிகழ்ச்சி மேலாண்மைப் படிப்பாகும்.

நிகழ்ச்சி மேலாண்மைப் படிப்பு, சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ என பல நிலைகளில் கற்பிக்கப்படுகிறது.

இது குறுகிய கால படிப்பு என்றாலும், நிர்வாக இன்சார்ஜ், நிகழ்ச்சி ஏற்பட்டாளர், மக்கள் தொடர்பு அலுவலர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல பணிகளைச் செய்யலாம். தனியாகவும் தொழில் செய்யலாம்.

நிகழ்ச்சி மேலாண்மைப் படிப்புக்கான தகுதி: இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு எம்.பி.ஏ, ஒரு வருட டிப்ளமோ, சான்றிதழ் எந்த வகுப்பிலும் சேரலாம்.

புகழ்பெற்ற நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். புகழ்பெற்ற பல பெரிய நிறுவனங்கள் இப்படிப்பை சிறப்பாய் கற்பிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com