பெட்ரோலிய தொழில்நுட்பம்: கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு!

இந்தியாவில்  பெட்ரோலியம்  மிகப் பெரிய  துறை. அதிகம்  விற்பனையாவது  பெட்ரோலிய  பொருட்களே.  அரசுக்கு  அதிக வருவாய்  ஈட்டி தருவதும்  இந்த  துறைதான். 
பெட்ரோலிய தொழில்நுட்பம்: கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு!

இந்தியாவில்  பெட்ரோலியம்  மிகப் பெரிய  துறை. அதிகம்  விற்பனையாவது பெட்ரோலிய  பொருட்களே.  அரசுக்கு  அதிக வருவாய்  ஈட்டி தருவதும்  இந்த துறைதான்.  மத்திய அரசு  பெட்ரோலிய  துறையில்  சி.எஸ்.ஐ.ஆர்.  எனும் அமைப்பின் கீழ் 1960-இல் புகழ்  பெற்ற  ஐஐபி  எனப்படும்  இந்திய  பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட்,  டேராடூனில்   உருவாக்கப்பட்டது.

இதன் குறிக்கோள்:   பெட்ரோலிய  தொழில் நுட்ப  தேவைகளைப் பூர்த்தி  செய்ய,  ஆராய்ச்சி,  கல்வி,  பயிற்சிகளை  வழங்குகிறது.

பெட்ரோலிய  சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்,  ஆட்டோ மோபைல்,  இயந்திர எரிபொருள் பயன்பாடு,  தர தேவைகள்,  வாகன மாசு,  பெட்ரோலிய பொருள்களின்  பகுப்பாய்வு, திறன் பயன்பாடு உள்ளிட்ட  சுத்திகரிப்பு  தொழில்  துறை பயிற்சிகளும்  முழு நேரப்  படிப்புகளாக  வழங்கப்படுகின்றன.

ரசாயன  அறிவியல்,  உயிரியல் அறிவியல், ரசாயன  பொறியியல் ஆகிய  3 பிரிவுகளில்  பி.எச்.டி படிப்பு உள்ளது  அறிவியல்,  பொறியியல்  பட்டம் பெற்றுகேட், நெட் போன்ற  நுழைவுத் தேர்வுகளில்  வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  எழுத்து நேர்முகத் தேர்வு  மூலம் சேர்க்கை  நடைபெறும். படித்தவர்களுக்கு  இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன.

முகவரி:

Director, Indian institue of petroliem, Govt.of India, P.O. Mohkampur, Dehradun, 248005, Uttarakhand, India

இணையதளம்:  https://www.iip.res.in/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com