படித்துக்கொண்டே சம்பாதிக்கலாம்!
எஞ்சினியரிங் படித்துக் கொண்டே மெஹந்தி ஆர்ட் ஒர்க், குல்லிங் ஆர்ட், இன்டர் நெட்டில் புட் பிளாக்ஸ் எழுதுவது என பார்ட் டைம் வேலை செய்து


எஞ்சினியரிங் படித்துக் கொண்டே மெஹந்தி ஆர்ட் ஒர்க், குல்லிங் ஆர்ட், இன்டர் நெட்டில் புட் பிளாக்ஸ் எழுதுவது என பார்ட் டைம் வேலை செய்து வருகிறார் சுபஸ்ரீ மணவழகன். அவரை சந்தித்தோம்:
""நான் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படித்து வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே மருதாணி போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். இதனால் மருதாணி போட கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம். இந்நிலையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த வடக்கத்திய குடும்பத்தைச் சேர்ந்த என் தோழி ஒருத்தியின் மூலம் முறையாக மருதாணி எப்படி போட வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அதன்பிறகு அவ்வபோது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் மருதாணி போட்டு விடுவேன். கல்லூரிக்கு வந்த பிறகும் என்னுடைய தோழிகளுக்கு மருதாணி போட்டு விடும் பழக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் என் கல்லூரி தோழியின் அக்காவின் திருமணத்திற்கு மருதாணி போட்டுவிட்டேன். அதைத் தொடர்ந்து தோழியின் தோழிகள், அவர்களது உறவினர்கள் என திருமணத்திற்கு மருதாணி போட ஆரம்பித்தேன். இதன் மூலம் எனக்கு சிறியதாக வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் அம்மாவிடம் மாதந்தோறும் வாங்கும் பாக்கெட் மணி வாங்குவதை நிறுத்திவிட்டேன்.
அதன்பிறகு தற்போது வீட்டிலேயே முன்பகுதியில் "மைகிரானி மெஹந்தி ஆர்ட் சென்டர்' என வைத்திருக்கிறேன். இதன் மூலம் டாட்டூவில் இருந்து திருமண மெஹந்தி வரை போட்டு வருகிறேன். மெஹந்தியில் இந்தியன், பாகிஸ்தானி, டாட்டூ என 3 வித ஆர்ட் இருக்கிறது. வகைக்கு ஏற்றவாறு 20 ரூபாய் முதல் 2000 வரை கிடைக்கிறது. வெளியில் பிரைடல் மெஹந்தி போட வேண்டும் என்றால் மிகவும் காஸ்ட்லியாக இருக்கும். இதனால் பிரைடல் மெஹந்திக்கு என்னிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
இதைத் தவிர படிக்கும் நேரம் போக, கிடைக்கும் நேரங்களில் குல்லிங் ஆர்ட் செய்வதையும், புட் பிளாக் எழுதுவதையும் தொடர்ந்து வருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...