படப்பிடிப்பு தளத்தைப் பார்த்தால் பயம்!
சன் தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "ஆதிரா'. அமானுஷ்ய தொடரான ஆதிராவில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீவாணி. அமானுஷ்ய தொடரில்


சன் தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "ஆதிரா'. அமானுஷ்ய தொடரான ஆதிராவில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீவாணி. அமானுஷ்ய தொடரில் நடிக்கும் அனுபவம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான் தெலுங்கு பொண்ணு. பி.காம் படித்திருக்கிறேன். ஏழாம் வகுப்பில் படிக்கும் போதே மீடியாவுக்கு வந்துவிட்டேன். தெலுங்கு டிவி சேனல்களில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் இருக்கிறேன். தமிழில் நான் நடித்த முதல் தொடர் "திருமாங்கல்யம்'. அதையடுத்து, தற்போது "ஆதிரா'வில் நடித்து வருகிறேன்.
எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. கணவர் விக்கிரமாதித்தன். மகள் ராஜ் நந்தினி. குடும்பப் பொறுப்பு காரணமாக தமிழில் நிறைய தொடர்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க முடிவதில்லை.
ஆதிரா அமானுஷ்ய தொடர். இதனாலயே இந்தத் தொடரில் நடிக்க ஒத்துக் கொண்டேன். அமானுஷ்ய தொடரில் நடிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இதுபோன்று திகில் தொடரில் நடிப்பது பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொடரில் நடிப்பதை விட இந்தத் தொடருக்கான லோகேஷனைப் பார்த்தால்தான் எனக்கு பயம் அதிகம். காரணம், இந்தத் தொடர் முழுக்க முழுக்க கொச்சின் லோகேஷனில்தான் படப்பிடிப்பு நடக்கிறது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் தெலுங்கு பொண்ணு நடிப்பது மலையாளம் பேசும் கொச்சியில். ஆனால் தொடர் ஒளிப்பரப்பாவதோ தமிழ்நாட்டில். இதனால் தமிழ்நாட்டில் தொடருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரிவதில்லை. இது குறித்து இயக்குநரிடம் அடிக்கடி விசாரிப்பேன். இளைஞர்கள், குழந்தைகள் அதிகம் ஆதிராவுக்கு ரசிகர்கள் என்பார். அவர் சொல்லுவது போன்று என் மகளுக்கும் ஆதிரா பிடிக்கும். மொழி புரியாவிட்டாலும் திகிலுக்காக தினமும் பார்ப்பாள்.
அதுபோன்று ஒருமுறை வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு அதிகாரி என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு நீங்க ஆதிரா நாயகிதானே என விசாரித்து பாராட்டினார். சந்தோஷமாக இருந்தது. அதிலிருந்து தொடருக்கு நல்ல வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
இதை தவிர தெலுங்கில் "மா' டிவியில் ஒரு தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறேன். மேலும் ராடான் டிவி தெலுங்கில் தொடங்கியிருக்கும் புதிய தொடரிலும் நடிக்கிறேன்.
பெரிய திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு நடிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும் குழந்தையைவிட்டு விட்டு அவுட்டோருக்கு அடிக்கடி செல்ல வேண்டும். இதனால் பெரிய திரை வாய்ப்புகளை ஏற்பதில்லை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...