

* இரவில் கட்டாயமாக மேக்கப்பை நீக்கிய பிறகுதான் தூங்க செல்ல வேண்டும். சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு மேக்கப்பை கலைக்காமல் தூங்கி விடுவீர்களானால் வெகு விரைவில் சொரசொரப்பான, வறண்ட மற்றும் வயதான சருமத்தை நீங்கள் பெற்று விடுவீர்கள். எப்படி என்றால் சருமத்தின் துவாரங்கள் வழியே மேக்கப் நுழைவதனால் துவாரங்களின் அளவு பெரிதாகும். எண்ணெய்யும் அழுக்கும் துவாரங்களை அடைத்து, அதனால் பருக்கள் ஏற்படும். இந்த பழக்கம் தொடர்ந்தால், வெகு விரைவில் உங்கள் சருமத்தை முதிர்ச்சி அடையச் செய்யும்.
* மேக்கப் பிரஷ்களை வெதுவெதுப்பான நீரில் குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஷாம்புவை கலந்து வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாத அழுக்கு படிந்த பிரஷ்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அதில் ஏற்கெனவே படிந்துள்ள மேக்கப் பொருட்கள் உங்கள் சரும துவாரங்களை அடைக்கும். மேலும் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
* கண்களில் செய்யப்பட்டுள்ள மேக்கப்பை ஈரமான பஞ்சைக் கொண்டு மென்மையாக துடைக்க வேண்டும். முரட்டுத்தனமாக அழுத்தி துடைத்தால் சுலபமாக சுருக்கம் ஏற்பட்டு விடும். மேலும் இமைகளின் அடர்த்திக்கு குறையத் தொடங்கும்.
* மஸ்காரா நீண்ட நேரம் நீடித்து நிற்பதால், பல பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவை கண் இமைகளை வறட்சியாக்கும். மேலும் அதனை நீக்கும் போது கண்களை அழுத்தித் துடைப்பதனால் கண்களை சுற்றியுள்ள சருமம் விரைவில் சுருக்கம் அடைவதோடு, இமைகளையும் உதிரச் செய்யும்.
* முகத்தின் மீது பூசும் ப்ரான்ஸரை முகம் முழுவதும் பூசினால் முகத்திற்கும், கழுத்திற்கும் உள்ள நிற வேறுபாடு பளிச்சென தெரிந்துவிடும். இதனால் முகம் முழுவதும் பூசாமல், உங்கள் மூக்கு, தாடை எலும்பு மற்றும் கன்னத்தின் இடுக்குகளில் மட்டும் பூசினால் முகம் எடுப்பாகத் தெரியும்.
* அழகு சாதனப் பொருட்களைத் திறக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தீர்த்து விட வேண்டும். முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பயன்படுத்தினால் தோற்றத்திற்கும், சருமத்திற்கும் நல்லதல்ல.
* வறண்ட சருமத்தை உடைய பெண்கள் குறிப்பாக இதனை செய்ய வேண்டும். முகத்தை போலவே உடலின் மற்ற சருமத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது முக்கியமாகும். வெப்பநிலை, வெந்நீர் குளியல், மாசு போன்றவைகள் அனைத்தும் தலை முதல் பாதம் வரையிலான சருமங்களை பாதிக்கும். அதனால் தினமும் அதனை மாய்ச்சுரைசர் செய்ய வேண்டும். இல்லை என்றால் சருமம் இயற்கை பொலிவை இழந்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.