உண்மைதான். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சர்வீஸ் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். சென்ற ஆண்டு எனது தலைமையில் போட்டியிட்ட அணி வெற்றிப் பெற்றது. நல்ல காரியங்கள் செய்ய முயற்சி எடுத்து வந்தோம். இதற்கிடையில் தெலுங்கில் எனக்கு இரு மெகா தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் ஹைதராபாத்திலும், "சின்னப் பாப்பா பெரிய பாப்பா' தொடருக்காக ஐந்து நாட்கள் சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருக்கிறேன். இப்படி சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் தலைவர் பதவியில் இருந்து கொண்டு சங்கத்திற்காக என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. கூட்டத்திலும் அதிகம் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், மற்றவர்கள் இருந்து நடத்தட்டுமே என்று நான் விலகிவிட்டேன்.