ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வீட்டு வைத்தியம்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 11:20 am

கே. பிரபாவதி

  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.

  தேநீரில் ஏலக்காயும், நான்கு, ஐந்து துளசி இலைகளும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், ஜலதோஷம், இருமல் முதலானவை நீங்கிவிடும்.

  முள்ளங்கியை அரைத்துச் சாறு எடுத்து தடவி வந்தால் எல்லாவிதமான சரும நோய்களும் அகலும்.

  வாரம் ஒருமுறை பாகற்காயைச் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ளப் பூச்சிகள் மடிந்துவிடும்.

  வாழைப் பிஞ்சோடு பருப்பும், தேங்காயும் சேர்த்து காரம் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

  பப்பாளிப் பழத்தை மாம்பழத் துண்டுகள் மாதிரிப்போட்டு தேனில் ஊரவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.