நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிறைய எழுத வேண்டும் என்று ஆசை! சொல்வது : நீலிமாராணி

""நான் நடிக்க வருவேன் என்று நினைக்கவில்லை. நடிக்க வந்தபிறகு ஹீரோயினாகத்தான் நடிக்க வேண்டும் என்றும் நினைத்ததில்லை.

News image
Updated On :25 நவம்பர் 2015, 8:31 am

ஸ்ரீ

""நான் நடிக்க வருவேன் என்று நினைக்கவில்லை. நடிக்க வந்தபிறகு ஹீரோயினாகத்தான் நடிக்க வேண்டும் என்றும் நினைத்ததில்லை. என் லெவல் எனக்குத் தெரியும். தற்போதைக்கு நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும். அது மக்களிடம் போய்ச் சேரவேண்டும். அதுவே எனக்குப் போதும்'' என்கிறார் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி.

Story image

1992 -இல் இருந்து சின்னத்திரை, பெரிய திரை என நடித்து வரும் இவர். சமீபத்தில் ஒரு சின்ன இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது ராடன் மீடியாவின் இரு தொடர்களான "வாணிராணி' மற்றும் "தாமரை' தொடரில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""ஒரு ரிலீஃப்பிற்காக சின்ன இடைவெளி தேவைப்பட்டது. அதனால் கொஞ்ச நாள்கள் நடிக்காமல் இருந்தேன். தற்போது "வாணி ராணி' தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.  வாணி ராணி தொடரில்  ராதிகா அம்மாவின் மருமகளாக, டிம்பிள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எந்

நேரமும் அவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பது போன்ற நெகட்டிவ் கேரக்டர். அதனால் அவர்களுக்கு ஈக்வலா நடிக்கணும். ரொம்பவும் சவாலான கேரக்டர். அதேபோன்று ராடனின் இன்னொரு தயாரிப்பான "தாமரை' என்ற தொடரில் லீட் ரோலில்  நடிக்கிறேன். அதில் என் கேரக்டர் பெயர் சினேகா. இதில் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்த பெண் கேரக்டர்.  இரண்டு கேரக்டருமே வெவ்வேறு வகையான போல்டான கேரக்ரடர்கள். மிகவும் பிடித்திருக்கிறது. நிறையப் பாராட்டுகளும் கிடைக்கின்றன. சந்தோஷமாக இருக்கிறது.

இதையடுத்து "இருவர் உள்ளம்', "வாலிப ராஜா'  என்று பெரிய திரையில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். பெரிய திரையில் இருந்து நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் வருகின்றன ஆனால் தொடர்களில் நடிப்பதால் போதிய அளவு நேரம் கிடைப்பதில்லை. அதனால்  எனக்குப் பொருத்தமான நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். "நான் மகான் அல்ல', "சந்தோஷ் சுப்ரமணியம்', "மொழி' படங்களைப் போன்று பெரிய திரையில் சில படங்களே நடித்தாலும், அவை நான் மறைந்த பிறகும் பெயர் சொல்லும்படியான படங்களாக இருக்க வேண்டும். அதைப்போன்று என் வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நடிப்பைத் தவிர எனக்குக் கதை எழுதுவது ரொம்பப் பிடிக்கும். காரணம் அது என் பிறப்பிலேயே இருக்கிறது. என் அப்பா தெலுங்கில் பிரபல எழுத்தாளர். அவருடைய நாவல்களும், பல துப்பறியும் கதைகளும் மிகவும் பிரபலமானவை. அவரைப் போன்று நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான நேரம் இருப்பதில்லை. நடிப்புக்கே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியிருந்தும் சமீபத்தில் "வீ' என்ற ஆங்கில இதழில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளை என் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அதேபோன்று எழுதும்படி நிறைய பத்திரிகை நண்பர்கள் கேட்கிறார்கள். ""நேரம் இருந்தால் பார்ப்போம்'' என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன்.  மேலும் இதுவரை எழுதியவற்றை விரைவில் புத்தகமாகக் கொண்டு வரும் திட்டமும் உள்ளது. எதிர்காலத்தில் நடிப்பைத் தாண்டி, ஒரு புரொடக்ஷன் நிறுவனத்தைத் தொடங்கி தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.