உணவே மருந்து!

உடல் பருமன், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, புற்றுநோய் என்று
Updated on
2 min read

உடல் பருமன், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, புற்றுநோய் என்று பலவிதமான வியாதிகளில் கஷ்டப்படுபவர்களுக்காக சிறுதானியம், நவதானியம் மற்றும் மருத்துவக் குணமுடைய நாட்டு மருந்துப் பொருள்களைக் கொண்டு விதவிதமான சுவையில் விதம்விதான வகைகளில் பலவிதமான ரெடிமிக்ஸ் வகைகளைத் தயாரித்து வருகிறார் ராஜேஸ்வரி ரவிகுமார். தஞ்சாவூர், திருவையாறை சேர்ந்த இவரின் தயாரிப்புகளின் பயன்பற்றி அறிந்த மத்திய அரசு நிறுவனமான “எஹய்க்ட்ண் ல்ங்ஹஸ்ரீங் ச்ர்ன்ய்க்ஹற்ண்ர்ய்’ இவருக்கு தேசிய விருதான "சிருஷ்டி சம்மன்' விருதை வழங்கி  கௌரவித்துள்ளனர். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான் பிறந்த ஊர், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமார்நேரி கிராமம். நிறைய படிக்க வேண்டும். டாக்டர் ஆகி  மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே ஆசை. ஆனால், 10-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க  வீட்டில் அனுமதிக்கவில்லை. பின்னர் திருமணம். 2 பெண் குழந்தைகள். கணவர் டிடெர்ஜெண்ட் சோப் டீலர். சரி... படிக்கத்தான் முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும்படியாகவும், 10 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியதாகவும் ஏதாவது வியாபாரம் செய்யலாம் என யோசித்தேன்.

கணவரும் சரி செய் என பச்சைக்கொடி காட்டினார்.

ஆனால் என்ன தொழில் செய்வது என யோசித்தபோது... இன்றைக்கு உடல் பருமன், நீரிழிவு,இரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, புற்றுநோய் என்று பலவிதமான வியாதிகளில் மக்கள் கஷ்டப்படுகிறார்களே... எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் இருந்தும் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி ஆரோக்கியமானவர்களே இல்லை என்ற அளவிற்கு பெரும்பாலானவர்கள் நோயாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இருக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் - நோய்களை வருமுன் தடுப்பதற்கும் என உணவுப்பொருள்களையே மருத்துவமாகத் தயாரித்தால் என்ன? வேலைவாய்ப்பும் கொடுக்கலாம், மக்களுக்கு நல்ல உணவுப்பொருளைக் கொடுத்த திருப்தியும் இருக்கும், நமக்கும் நாலு காசு கிடைக்கும் என்று இந்த சிறுதானியம், நவதானியம் மற்றும் மருத்துவக் குணமுடைய நாட்டு மருந்துப் பொருள்களைக் கொண்டு விதம்விதமான சுவையில் விதம்விதான வகைகளில் பலவிதமான “தங்ஹக்ஹ் ற்ர் ஸ்ரீர்ர்ந்’ வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்தேன்.

 முதலில் 10 பாக்கெட் - 100 பாக்கெட் என சென்றது. இப்போது நிறையவே போகின்றது. எங்களின் தயாரிப்பின் பயன் பற்றி அறிந்த மத்திய அரசு நிறுவனமான எஹய்க்ட்ண் டங்ஹஸ்ரீங் ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய் சென்ற மார்ச் 8 அன்று  "சிருஷ்டி சம்மன்' தேசிய விருது வழங்கினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com