""எனக்கு சின்ன வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அப்பா மருத்துவம் வேண்டாம் என்றார். காரணம், ""மருத்துவம் என்பது முழு அர்ப்பணிப்போடு செய்கின்ற தொழில். அப்படியிருக்க திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தை என்று வந்துவிட்டால் உன்னால் முழு அர்ப்பணிப்போடு மருத்துவத் துறையில் ஈடுபட முடியாது. அதனால் மெடிக்கல் சீட்டை வேஸ்ட் பண்ணாதே'' என்றார். இதனால் அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படித்தேன். இருந்தாலும் மருத்துவம் மீது இருந்த ஆசை மாறவில்லை. இதனால் மருத்துவராக முடியாவிட்டாலும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு, பார்மா கண்டுபிடிப்பு, ஆபரேஷன் தியேட்டர் சம்பந்தமான ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக மாஸ்டர் ஆஃப் பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படித்தேன். அதன்பின் மருத்துவமனை நிர்வாகம், கிளினிக்கல் ரிசர்ச் என படித்துவிட்டு மருத்துவத்துறைக்கே வந்துவிட்டேன்'' என்கிறார் பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான கே.எம்.செரியனின் மகள் சந்தியா செரியன். சென்னை முகப்பேரில் உள்ள அவரது தந்தை செரியனின் "frontier Life Line' மருத்துவமனையின் நிர்வாகத்தை கவனித்து வரும் இவரைச் சந்தித்தோம்:
மருத்துவ நிர்வாகம் செய்யும் போது ஏற்படும் சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?
மருத்துவ நிர்வாகம் என்பது மிக மிக சவாலான விஷயம். தினம் தினம் ஏதாவது ஒரு துறையில் புதுபுது சவால்கள் இருந்து கொண்டே இருக்கும். அன்றாடம் பல
தரப்பட்ட மக்களையும், அவர்களது சிக்கல்களையும் சந்திக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று தவறினாலும் அதைத் தீர்த்து வைப்பது பெரும் சிக்கலாகிவிடும். இப்படி எத்தனை சவால்கள் வந்தாலும் நோயாளியின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போது பிரச்னைகள் சரியாகிவிடும்.
வசதியற்றவர்கள் பிரபல மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்து கொள்வது என்பது இன்றைய சூழலில் சாத்தியப்படாத ஒன்று? அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் எந்த வகையில் உதவுகிறீர்கள்?
மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் ஒரு சாரிட்டபிள் டிரஸ்ட் வைத்திருக்கிறோம். மேலும் சில என்.ஜி.ஓக்களின் உதவிகளையும் பெறுகிறோம். அதன் மூலம் வசதியற்றவர்களுக்கு உதவி வருகிறோம். மேலும் சமீபகாலமாக முதலமைச்சர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருப்பதால் வசதியற்றவர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கிறது.
அப்பாவிற்கு உதவியாக உங்களது பங்களிப்பு என்ன?
அவருக்கு மூன்றாவது கண் போல உதவி வருகிறேன். என்னுடைய இடத்தில் வேறு வெளி ஆள் யாராவது இருந்தால் நிர்வாகத்திற்கு நூற்றுக்கு நூறு உண்மையாக இருப்பார்களா? என்பது நிச்சயமில்லை. ஏதாவது ஒரு வகையில் பணம் செய்ய நினைப்பார்கள். அந்தவகையில் அப்பாவிற்கு நான் உதவியாக இருக்கிறேன்.
இதய நோய் ஏற்படாமல் இருக்க தற்காப்பு விஷயங்கள் என்னன்ன?
எல்லா மருத்துவர்களும் சொல்வதுதான் நோய் வராமல் தற்காத்து கொள்ள நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும், தினமும் கட்டாயம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். எண்ணெய் உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். முக்கியமாக சொல்ல வேண்டியது. உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்நோயின் தாக்கம் இருந்திருந்தால், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். பொதுவாக அனைவருமே ஆண்டுக்கு ஒருமுறை தங்களை கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நான் ஆரோக்கியமாக தானே இருக்கிறேன். ஏன்? பரிசோதனை என்று நினைக்கக் கூடாது. பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் உள்ளே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது இல்லையா?
இதற்கு என் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே உதாரணமாக சொல்லுகிறேன்.
என் கணவர் பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாக, நல்ல உடற்கட்டுடனும் இருப்பார். அவரை எப்போது முழு பரிசோதனைக்கு அழைத்தாலும், ""நான் ஆரோக்கியமாக தானே இருக்கிறேன்'' என்று மறுப்பார். காரணம், அவருக்கு மருத்துவமனை, ஊசி என்றால் பயம். என் அம்மா பரிசோதனைக்கு வற்புறுத்தி அழைத்தால் அம்மாவை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளே குதிரை சவாரிப் போன்று சுற்றி ஓடி வருவார். ""நான் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் பார்த்தீர்களா?'' என்பார். ஆனால் திடீரென்று ஒருநாள் இரவு நன்றாக படுத்து உறங்கியவர். மறுநாள் காலை எழுந்திருக்கவே இல்லை. படுக்கையிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதனால் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தால் அதை நம்பாதீர்கள். நாள் தோறும் எவ்வளவோ செலவு செய்கிறீர்கள். அதில் ஒரு சிறிய தொகையை உங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை செலவு செய்து கொள்ளுங்கள்.
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டிய முதலுதவி என்ன?
அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது போன்று உங்களுக்கு தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். அதற்கு முன்பு அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் ஆஸ்பிரின் மாத்திரை இருந்தால் வாங்கி போட்டுக் கொள்ளலாம். இது மருத்துவமனை செல்லும் வரை உங்களுக்கு பாதுகாப்பைத் தரும்.
உங்களுடைய எதிர்கால திட்டம்?
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் அனைவராலும் மருத்துவம் படிப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் மருத்துவத்துறை சார்ந்து ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக நாங்கள் சில கோர்ஸ்களை அறிமுகம் செய்திருக்கிறோம். பி.எஸ்.சி கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி பெர்பியூஷன் டெக்னாலஜி, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி, பி.எஸ்.சி அனஸ்தீஸியா டெக்னாலஜி என்று இவை எல்லாம் 2005 - இல் இருந்து இருக்கிறது. நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும்.
அதையடுத்து சமீபத்தில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள "பிரான்டியர் மெடிவல்' என்ற அமைப்பின் மூலம் ஒரு புரொஜக்ட் தொடங்கியிருக்கிறோம். இதன் மூலம் பத்தாவது, பன்னிரண்டாவது வரை படித்த தந்தையில்லாத பெண் குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு நானோ டெக்னாலஜி பயிற்சி அளித்து வருகிறோம். இதில் பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது நாங்கள் புதிதாக உருவாக்கிவரும் பயோ பெரஸ்டடீக் வால்வு புரொஜக்ட்டில் நானோ கோட்டிங் எல்லாம் செய்து கொடுத்து உதவியாக இருக்கிறார்கள். இந்தப் புரொஜக்ட்டில் இதுவரை 6 பெண்களுக்கு பயிற்சி அளித்து உள்ளோம். இதன்மூலம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்துப் பெண்களுக்கு இவர்கள் ரோல் மாடல்களாக இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் கணக்கு பராமரிப்புப் பதிவேடுகள் ஆய்வு

சங்கராபுரம் வள்ளலாா் மன்ற முப்பெரும் விழா

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

