அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கலாசாரம் சார்ந்தே உணவுமுறை இருக்க வேண்டும் - தேவி உமாபதி

""நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பி.டெக் படித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகள் அப்பாவுடன் அவரது நிறுவனத்தை கவனித்து வந்தேன்.

News image
Updated On :27 அக்டோபர் 2015, 9:28 am

ரிஷி

""நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பி.டெக் படித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகள் அப்பாவுடன் அவரது நிறுவனத்தை கவனித்து வந்தேன்.

சின்ன வயதிலிருந்தே எனக்கு  பிஸினஸ் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காக  யூ.கே. சென்று எம்.பி.ஏ  படித்தேன். அங்கே ஒன்றரை வருடம் இருந்தேன்.  அங்கே நான் சந்தித்த அனுபவங்கள் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. வெளிநாட்டு பொருட்களின் மோகத்தினால் நாம் நமது கலாச்சாரத்தை விட்டு விலகிக் கொண்டிருக்கிறோமே என்று தோன்றியது.  உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஓட்ஸ் என்பது அமெரிக்காவில் மாட்டுத் தீவனம். ஆனால் நாம் அதைத்தான் தற்போது விரும்பி உண்ணுகிறோம். ஆஸ்திரேலியாவில் ஓட்ûஸ வேகவைக்க 1- 2 மணி நேரம் ஆகும். ஆனால் இங்கு இருக்கும் ஓட்ஸ் 2 நிமிடத்தில் வெந்துவிடுகிறது. இது எப்படி என்று யாரும் கேட்பதில்லை. பெரும்பாலும் யாருக்கும் இதை பற்றிய புரிதலும் இல்லை, விழிப்புணர்வும் இல்லை.

ஆனால் இதைவிட சிறந்த மருத்துவகுணங்கள் கொண்ட உணவு வகைகள் நமது பாரம்பரியத்திலேயே இருக்கிறது. அதை எல்லாம்  நாம் மறந்து விட்டதன் விளைவுதான் நோய்கள் அதிகரிப்பு. அதனால் அப்போதே முடிவு செய்துவிட்டேன் நம் கலாசாரம் சார்ந்த தொழிலையே தேர்வு செய்யவேண்டும் என்று. அதற்காக நிறைய தேடி யோசித்து ஆரம்பித்ததுதான்

ஜி. ஆர்கானிக்ஸ். நமது மரபுக்கு, நமது ஜீன்னுக்கு என்ன பொருந்துமோ அவற்றைதான் இங்கே வைத்திருக்கிறோம்'' என்கிறார் சென்னை வளசரவாக்கத்தில் ஆர்கானிக் பொருட்களின் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தேவி உமாபதி. மேலும் அவர் கூறியது:

அனைவரும் வாங்க முடியாதபடி ஆர்கானிக் பொருட்களின் விலை கூடுதலாக இருக்கிறதே?

 விலை கூடுதல் என்பதே ஒரு தவறான கண்ணோட்டம்தான். இதற்காக எங்களது கஸ்டமரான ஒரு நியூட்ரினிஸ்ட் சொன்ன விஷயத்தை சொல்கிறேன். ""பொதுவாக நம்ம மார்க்கெட்ல கிடைக்கிற தக்காளியைவிட ஆர்கானிக் தக்காளியில் கிடைக்கும் சத்துக்கள் அதிகம். எப்படி என்றால் நம்ம நார்மலாக வாங்கும் தக்காளியில் பூச்சுக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வளருகிறது. அதை குறைந்த விலை கொடுத்து வாங்குவதினால் நம்ம உடலுக்கு தேவையான சத்துக்கள் பூர்த்தியாவது கிடையாது. மேலும் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. அதுவே இயற்கை உரங்களால் பக்குவமாக விளைந்த தக்காளி சற்று விலைக் கூடுதலாக இருந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள்

அதிகம் கிடைக்கிறது. அப்படி பார்க்கும்போது இது குறைவு தான். ஆனால் இதை ஏன் மக்கள் விலை அதிகம் என்று சொல்கிறார்கள் என்பது புரியவில்லை'' என்றார்.

ஆர்கானிக் காய்கறிகளின் விளைச்சலில் எந்தவிதமான பூச்சுக்கொல்லியோ, செயற்கை உரமோ சேர்ப்பதில்லை. இதனால் நார்மல் பழங்களை விட ஆர்கானிக் பழங்களின் சுவை அபரிமிதமாக இருக்கும். உதாரணமாக மாம்பழ சீசனில்  கிடைக்கும் ஆர்கானிக் மாம்பழங்களை ஒரு முறை வாங்கி சுவைத்துவிட்டால் அதன் பிறகு வேறு எந்த மாம்பழத்தையும் தொடவே மாட்டார்கள்.

அதே சமயம் உடலுக்கும் ஆரோக்கியம். மேலும் இதன் விளைச்சலுக்கு மனித உடல் உழைப்பும் அதிகம் ஆனால் இதனை பயன்படுத்தும் மக்கள் குறைவு.  இதனால் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. இவை எல்லாம்தான் விலை கூடுதலுக்கான காரணம். ஆனால் தற்போது மக்கள் இந்த இயற்கை காய்கறிகளின் மகத்துவத்தை உணர்ந்து வருகிறார்கள். இதனால் வருங்காலத்தில் மார்க்கெட்டில் ஆர்கானிக் காய்கறிகளை மட்டுமே கேட்டு வாங்கும் காலமும் வரலாம். அப்படி தேவை அதிகரிக்கும்போது நிச்சயம் இதன் விலையும் குறையும்.

உங்களுடைய தயாரிப்புகள் என்னென்ன?

இப்போதைக்கு  ஒரு முழுமையான ஆர்கானிக் ஸ்டோராகதான் இதை தொடங்கியிருக்கிறோம். ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று  எப்படி நமது வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகிறோமோ அதுபோன்று  அனைத்து பொருட்களையும் இந்த ஆர்கானிக் ஸ்டோரில் கொண்டு வர நினைத்தோம்.

அதாவது வீட்டைச் சுத்தம் செய்யும் "மாப்'பிலிருந்து மளிகைப் பொருட்கள், ஸ்நாக்ஸ் ஆயிட்டங்கள், சிறுதானிய ரெடிமிக்ஸ் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், நலங்குமாவு, காஸ்மெட்டிக்ஸ் வரை அனைத்தையும் ஆர்கானிக் பொருட்களாகத்தான் வைத்திருக்கிறோம்.  மற்றபடி எங்கள் தயாரிப்பு என்றால் சிறுதானியங்களில் ரெடிமிக்ஸ், ராகி முறுக்கு, கை முறுக்கு, குதிரைவாலி முறுக்கு, குதிரைவாலி ரிப்பன் பக்கோடா  போன்றவற்றைச் சொல்லலாம்.

மேலும் பருப்பு வகைகள், சமையலுக்கு தேவையான  செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யும் எங்கள் தயாரிப்புதான். இதைத் தவிர எங்களுக்கு சொந்தமாக மேகமலை பகுதியில்  கொஞ்சம் நிலம் இருக்கிறது. பெரியளவில் விவசாயம் செய்யாத பூமி அது. தற்போது அதை பண்படுத்தி  மிளகு, காபி, லவங்கம் போன்றவற்றை பயிரிட்டிருக்கிறோம். மேலும் எங்களுக்கு தேவையான ஆர்கானிக் காய்கறிகளையும் அங்கே பயிரிட்டிருக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.