நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பார்வையற்றோருக்கான புத்தகம் 'ஒயிட் பிரிண்ட்' உருவானது எப்படி?

கண் பார்வையற்றவர்களுக்காக 'ஒயிட் பிரிண்ட்' என்ற பெயரில் பிரெய்லி பத்திரிகையை நடத்தி வரும் 27 வயதான உபாசனா மகதி தன்னுடைய அனுபவத்தை விவரிக்கிறார்:

News image
Updated On :15 செப்டம்பர் 2015, 7:17 am

பூா்ணிமா

கண் பார்வையற்றவர்களுக்காக 'ஒயிட் பிரிண்ட்' என்ற பெயரில் பிரெய்லி பத்திரிகையை நடத்தி வரும் 27 வயதான உபாசனா மகதி தன்னுடைய அனுபவத்தை விவரிக்கிறார்:

""இந்தச் சமூகத்திற்கு பொருளாதாரரீதியாக என்னால் ஏதும் செய்ய முடியாவிட்டாலும் வேறு வகையில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கல்லூரி நாள்களிலேயே என்னுடைய மனதில் தோன்றியது. மக்கள் தொடர்பு செயலதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மூன்றாண்டு கால மாஸ் மீடியாவில் சேர்ந்து படித்தேன்.

ஒருநாள் தற்போது வெளியாகும் பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கிப் பார்த்தபோதுதான் ஒரு வித்தியாசம் தெரிந்தது. அனைத்துத் தரப்பினருக்கும் தனித்தனியாகப் பத்திரிகைகள் இருக்கும்போது கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை கூட இல்லையே என்ற எண்ணம் மனதில் உறுத்தியது. மூன்று மாத கால ஆய்வுக்குப் பின்னர் என்னுடைய வேலையை உதறிவிட்டு "ஒயிட் பிரிண்ட்' என்ற பெயரில் பிரெய்லி இதழைத் தொடங்கத் தீர்மானித்தேன்.

துணிந்து ஒரு பெண்ணால் பிரெய்லி பத்திரிகை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. பெண் என்ற காரணத்தினாலேயே இந்தப் புதிய முயற்சியில் இறங்கலாமென்ற துணிச்சலும் ஏற்பட்டது. ஏனெனில் உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை பெண்களால்தான் உணர முடியுமென்பது என்னுடைய கருத்தாகும்.

"ஒயிட் பிரிண்ட்' பத்திரிகைக்கு பார்வையற்றோர்களிடமிருந்து எதிர்பார்த்ததைவிட பிரமாதமான வரவேற்பு கிடைத்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. பயணங்கள், உணவு, கதைகள், தொழில்நுட்பங்கள், இசை, சினிமா போன்ற பல்வேறு விஷயங்கள் "ஒயிட் பிரிண்ட்'டில் இடம் பெற்றதை வரவேற்று பார்வையற்றவர்கள் எழுதிய கடிதங்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

"ஒயிட் பிரிண்ட்' வாசகர்களால் திரைப்படங்களைப் பார்க்க முடியாது என்றாலும் செவி வழியே வசனங்கள், பாடல்களைக் கேட்டு உணர முடியும் என்பதால் சினிமாவைப் பற்றி குறிப்பாக வதந்தி தகவல்களைப் பிரசுரிக்கும்படி கேட்டது ஆச்சரியமாக இருந்தது.

என்னுடைய கல்வியறிவுதான் என்னைத் துணிவுடன் இந்தத் தொழிலில் இறங்கத் தூண்டியது. அனுபவம் என்பது செயல்முறை மூலமாகத்தான் கிடைக்குமே தவிர,  பாடப்புத்தகங்கள் மூலம் கிடைக்காது என்பது தெரிந்தது. அனுபவம் போன்ற சிறந்த ஆசிரியர் வேறு எதுவும் இல்லை'' என்கிறார் உபாசனா.

தற்போது பார்வையற்றவர்களுக்காக "பி பார் பிரெய்லி' என்ற தலைப்பில் மியூசிகல் குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார். சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள இவர், ""பிரெய்லி இலக்கியத்தை மக்கள் அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு. இந்த வித்தியாசமான துறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.