குழந்தை வளர்ப்பு எண்ணிலடங்கா ஆலோசனைகள்!
நான் பல ஆண்டுகளாக வெளிநாட்டிலேயே இருந்து விட்டேன். அங்கேதான் என் குழந்தைகள் பிறந்து வளர்ந்ததெல்லாம்.


ராம்கோ குரூப்ஸ் நளினா ராமலட்சுமி சொல்கிறார்:
குடும்ப வாழ்க்கை முறையிலும், குழந்தை வளர்ப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவரும் காலகட்டமிது. கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிவிட்ட இந்தச் சூழலில் குழந்தை வளர்ப்புக்கான நல்ல வழிமுறைகள் கிடைக்காமல் தவிக்கும் பெற்றோருக்கு அவரது தேவையை நிறைவு செய்வதுடன் சிறந்த வழிகாட்டியாகவும் இருக்க இணையத்தின் மூலம் "பேரண்ட் சர்க்கிள்.காம்' மற்றும் செல்பேசி செயலியும் (மொபைல் ஆப்) தொடங்கியிருக்கிறார் "ராம்கோ குரூப்ஸ்' குடும்பத்தைச் சேர்ந்த நளினா ராமலட்சுமி. இது குறித்து மேலும் அவர் கூறுகையில்:
""நான் பல ஆண்டுகளாக வெளிநாட்டிலேயே இருந்து விட்டேன். அங்கேதான் என் குழந்தைகள் பிறந்து வளர்ந்ததெல்லாம். அப்போது வளர்க்க சரியான வழிமுறை கிடைக்காமல் தவித்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் வீட்டில் பெரியவர்கள் இல்லாததை நிறையவே மிஸ் செய்தேன். ஒவ்வொன்றுக்கும் இந்தியாவில் என் வீட்டிற்கு போன் செய்து அறிந்து கொள்வேன். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் மீண்டும் சென்னை வந்துவிட்டோம்.
இங்கேயும் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்களாக வாழ்வதைப் பார்த்தேன். அந்த வீடுகளில் உள்ள பெண்கள் குழந்தையை வளர்க்கப்படும் கஷ்டங்களையும் உணர்ந்தேன். அப்போது அந்த நாளில் நான் சந்தித்த அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இந்தப் பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் வந்தது. ஆனால் அப்போது என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததால் கொஞ்சம் பொறுத்திருந்தேன். தற்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். இதனால் என் கணவரிடம் என் எண்ணத்தைச் சொன்னேன். ""தைரியமாக செய். உன்னால் முடியும்'' என்றார்.
அவர் அளித்த ஊக்கத்தினால் 2011-ஆம் ஆண்டு "பேரண்ட் சர்க்கிள்' என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கினேன். பிறகு 2013 -இல் குழந்தை வளர்ப்புக்காக "செல்லமே' என்ற தமிழ் மாத இதழும் தொடங்கினேன். இவற்றின் தொடர்ச்சியாக, தற்போது பேரண்ட் சர்க்கிள்.காம் என்ற இணையதளமும், ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த இணையதளமும் மொபைல் அப்ளிகேஷனும் உலகெங்கும் உள்ள குழந்தை வளர்ப்புத் தகவல்கள், வழிமுறைகள், வல்லுநர்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கும். இவற்றை கிளிப் புக் (ஸ்ரீப்ண்ல் க்ஷர்ர்ந்ள்) எனப்படும் வடிவத்தில் தனித்தனித் தொகுப்புகளாகத் தொகுத்திருக்கிறோம். இதில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். இதன் மூலம் மற்ற பெற்றோரும் பயனடைவர்.
இருபதுக்கும் மேற்பட்ட குழந்தை வளர்ப்புத்துறை வல்லுநர்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வியாளர்களையும் ஒருங்கிணைத்து குழந்தை வளர்ப்பில் உள்ள பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறோம். மேலும் குழந்தை வளர்ப்புக் குறித்த எண்ணிலடங்கா ஆலோசனைகள் இணையத்தில் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. அவற்றைக் குவித்து, பெற்றோர் கைகளில் வழங்குகிறோம். விரைவில் இந்த இணையத்தின் மூலம் 10 லட்சம் பெற்றோரை எங்களின் உறுப்பினர்களாகச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.
முதலில் மூன்று பெருநகரங்களில் அறிமுகம் செய்கிறோம். அடுத்து ஆயிரம் கல்வி நிறுவனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். நவீன யுக பெற்றோரின் தேவைகளுக்கேற்ப வரும் 5 ஆண்டுகளில் பல புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதே எமது இலக்கு'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...