சென்னையில் உள்ள ராணி சீதை அரங்கில் சமீபத்தில் மாநகரின் மிக அழகான பெண்ணைக் கண்டறிவதற்கான தேடல் நடைபெற்றது. அதற்காக "சென்னையின் முகம் - 2015' ஃபேஷன் ஷோவை ஐரிஸ் ஈவண்ட்ஸ் அமைப்பு நிறுவனர் லதா கிருஷ்ணா குழு நடத்தினார்.
தொடர்ந்து நான்காவது முறையாக நடத்தப்படும் இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 900 இளம் பெண்கள் பங்கேற்றனர். அதில் சென்னையின் முகம்- 2015 போட்டி நிகழ்வின் வெற்றியாளராக செல்வி சுஜா மகுடம் சூட்டப்பட்டார்.

மேலும் மிஸ் எக்ஸ்பிரஸிவ் அய்ஸ், மிஸ் என்டைஸிங் ஸ்மைல், மிஸ் சேலன்ஞ், மிஸ் பாப்புலர் ஃபேஸ், மிஸ் ஹெல்தி ஹேர் மற்றும் மிஸ் ஃபேஸ்புக் மேக்ஸ் லைக்ஸ் போன்ற இன்னும் பல்வேறு வகைகளில் பல இளம் பெண்கள் வெற்றி வாகை சூடினார்கள்.
இவ்விழாவில் பாரம்பரிய ஆடைகளுக்கான சுற்று, ஸ்பின்ஸ் சன்ட்டான் ரிமூவருக்கென பிரத்யேக கடற்கரை சுற்று, இந்தியாவை விடுவிக்கும் சவால் சுற்று மற்றும் பார்ட்டியின்போது அணியும் ஆடைகளுக்கான சுற்று, அழகு நடை சுற்று ஆகியவை கண்கவர் சுற்றுகளாக, பார்வையாளர்களைக் கவர்ந்தன.
இந்நிகழ்ச்சியின்போது ஒரு தனித்துவமான கருப்பொருள் அடிப்படையில் சஞ்சய் அஸ்ராணியால் உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது. கடந்த ஆண்டின் "சென்னையின் முகம்- 2014' நிகழ்வின் வெற்றியாளரான செல்வி சம்யுக்தாவோடு சேர்ந்து சஞ்சய் அஸ்ராணி இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த நிதியில் ஒரு பகுதியானது, மூத்த குடிமக்கள் இல்லமான டிக்னிட்டி ஃபவுண்டேஷன்ஸ் மற்றும் எய்ட்ஸ் பாதிப்புள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான இல்லமான ஹோப் ஃபவுண்டேஷன்ஸ் ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும் இமேஜ் கன்சல்டன்ட் எக்தா சுராணா, தேசிய வடிவமைப்பு பள்ளியின் இயக்குநர் ஆ.மு.ரெய்ஸ், கனோபா - இலுமினேட்டிங் டைனி மைன்ட்ஸ் அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான அமுதா, திரைப்பட நட்சத்திரம் செல்வி. உமா ஐயர் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர் கருண் ராமன் போன்றோர் இந்நிகழ்வின் நடுவர்குழு உறுப்பினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் போட்டியிட்ட 14 போட்டியாளர்கள் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிசைன் மாணவர்களால் அழகாக வடிவமைக்கப்பட்ட கண்கவர் ஆடைகளில் வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


