அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அழகு குறிப்புகள்!

தேன் மற்றும் லவங்கப்பட்டையின் பொடி  இரண்டையும் குழைத்து முகத்தில் தடவி 10   நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட

News image
Updated On :2 பிப்ரவரி 2016, 9:18 am

ரிஷி

  தேன் மற்றும் லவங்கப்பட்டையின் பொடி  இரண்டையும் குழைத்து முகத்தில் தடவி 10   நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட முகம் பளிச்சென்று ஆகிவிடும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் - பக்டீரியாக்களை அழிக்கும். மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்தக் கலவை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு.

  வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் தோலை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.

  வைட்டமின் "சி' நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். மேலும் எலுமிச்சை சருமத்தைப் பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று புத்துணர்ச்சியாக இருக்கும்.

  முகம் புத்துணர்வு பெறுவதற்கு சிறிது புதினா இலைகளை உபயோகிக்கலாம். முகத்தை நன்றாக கழுவிய பின்பு சிறிது நேரம் கழித்து புதினா சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து அது காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். நீங்களே அதன் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

  சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். பெரும்பாலான சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.