பனிக்கால அழகுக் குறிப்புகள்!


< பனிக்காலத்தில் குளிப்பதற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது. சோப்பினால் வறட்சித் தன்மை அதிகமாகும். இதற்குப் பதிலாக கடலைமாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் சம அளவு கலந்து அதனுடன் காயவைத்த ஆரஞ்சுப் பழத்தோலை சேர்த்து பொடியாக்கி கலந்து சிறிதளவு தண்ணீர்விட்டு "கிரீம்' போல உடலில் பூசிக் குளித்தால் உடலில் உள்ள வறட்சித் தன்மை நீங்கும்.
< பனிக்காலத்தில் வாரம் இரண்டு முறையாவது எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும்.
< ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி உடல் மற்றும் தலையின் மேற்பரப்புப் பகுதிகளில் நன்றாக தேய்த்துவிட்டு இளம் சுடுநீரில் குளிக்க வேண்டும்.
< பனிக்காலத்தில் பாதங்களில் ஏற்படும் வெடிப்பைப் போக்க தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து வெடித்த பகுதிகளில் பூசலாம்.
< இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் உதடுகளில் வெண்ணெய் அல்லது பாலாடையைத் தடவி மெதுவாக வருடிக் கொடுத்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...