மகிழ்ச்சி அளிக்கும் சுதந்திரம்! சொல்கிறார் : நதியா
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ( 2004) படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த பின்னர். என்னை பல படங்களில் நடிக்க அழைத்தவர்கள் எல்லாம் அம்மா


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ( 2004) படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த பின்னர். என்னை பல படங்களில் நடிக்க அழைத்தவர்கள் எல்லாம் அம்மா பாத்திரத்தையே கொடுக்க முன் வந்தார்கள். என் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஒரு சிலர் மட்டுமே உருவாக்குகிறார்கள் என்று கூறும் நதியா, 80-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழி படங்களிலும் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்திருந்தார்.

""உனக்கும் 40 வயதாகிவிட்டது. உன்னுடைய குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பராமரித்துக் கொள்ளவும் தொடங்கிவிட்டதால் நடிக்க வேண்டும் என்ற ஆசை உனக்கிருந்தால் தாராளமாக நடிக்கலாம்'' என்று கணவர் கொடுத்த அனுமதியின் பேரிலேயே நதியா மீண்டும் நடிக்க தொடங்கினார்.
ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த பின்னர் அடுத்தடுத்து அம்மா பாத்திரத்திலேயே நடிக்க அழைத்ததால் தமிழ்ப்பட வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக கூறும் நதியா. தெலுங்கில் நித்தின் - சமந்தா நடிக்கும் "அ..ஆ..' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திருவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் எனக்கு ஒரு திருப்பத்தை தருமென்று கூறுகிறார்.
""முதன்முதலாக நடிக்க வந்தபோது செட்டில் நான் மட்டும் இளையவள். தற்போது திரையுலகில் இளைய தலைமுறையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களுடன் வேலை செய்யும்போது அவர்கள் தரும் மரியாதை என்னையும் அவர்களில் ஒருத்தியாகவே நினைக்க தோன்றுகிறது'' என்று கூறும் நதியா. மும்பையில் வாழ்ந்து வந்தாலும் இந்தி பட வாய்ப்புகளை அவர் விரும்பவில்லையாம்.
அப்படியே வந்தாலும் ரிமேக் படங்களில் நடிக்கவே அழைக்கின்றனர். புதுமையான பாத்திரங்களில் நடிக்க விரும்புவதால் வரும் வாய்ப்புகளை நிராகரித்து விடுகிறாராம். தன்னிடமுள்ள பல கதைகளை இன்றைய தலைமுறை நடிகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் உண்டு. 40 வயதான பெண்ணொருத்தி தன் இளமை காலத்தையும் முதல் காதலையும் வைத்து உருவாக்கிய கதையொன்றை சில நடிகர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.
திரையுலகிலிருந்து ஒதுங்கிய சில நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது போல் நதியாவுக்கும் வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் சீரியல்களின் தயாரிப்பாளர்கள், மேல்நாடுகளில் உள்ளதுபோல், 30-40 வயதினர் ரசிக்கும் படியான சீரியல்களை தயாரிக்க வேண்டும். இங்கு எல்லா மொழிகளிலும் சீரியல்கள் ஒரே வட்டத்திற்குள் சுழல்கின்றன'' என்கிறார்.
இன்றைய பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"" ஏதாவது ஒரு வகையில் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவே கருதுகிறேன். தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகைகளில் திறமையை வளர்த்துக் கொள்வது நல்லது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...