சீரியல் நடிப்பு திரில்லான அனுபவம்! சொல்கிறார் : மோனிகா
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் மோனிகா.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் மோனிகா. சின்னத்திரையில் அவ்வப்போது நடிகையாகவும் வலம் வரும் அவர். தற்போது அரிதாரம் பூசியிருப்பது "தெய்வம் தந்த வீடு' தொடருக்காக. ஒரு இனிய தருணத்தில் அவரை சந்தித்தோம்:

"தெய்வம் தந்த வீடு' தொடரில் நடிப்பது குறித்து?
நான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் 2008-இல் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தான் நடிகையாக மாறினேன். எனது முதல் தொடர் "காமெடி காலனி', அடுத்து "செந்தூரப்பூவே' இப்போது "தெய்வம் தந்த வீடு'. என்னதான் நடித்தாலும் எனது அடையாளம் என்றுமே தொகுப்பாளினிதான். ரசிகர்களும் என்னை தொகுப்பாளினி மோனிகாவாகத்தான் பார்க்கிறார்கள். சீரியல் நடிப்பு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது.
தொலைக்காட்சி தொடர்களுக்கு தற்போது வரவேற்பு எப்படி இருக்கிறது?
தொலைக்காட்சி தொடர்கள் வந்தபோதில் இருந்த வரவேற்பு ஒரு காலகட்டத்தில் மாறிவிட்டது. சில தரமற்ற தொடர்களினால் மக்கள் மெகா தொடர் என்றாலே விமர்சிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளை பேசவும், அதற்கு தீர்வு சொல்லவும் பல தொடர்கள் வந்துவிட்டன. இதனால் மீண்டும் தொடர்களை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், முன்பெல்லாம் பெண்கள் மட்டும் தொடர்களின் ரசிகையாக இருந்தார்கள். ஆனால் தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஆண்களும் ஒரு சில தொடர்களை ரசித்து பார்க்க ஆரம்பித்து உள்ளனர். இதை ஆரோக்கியமான விஷயமாக நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உழைக்கும் அளவு சீரியல்களுக்கும் உழைக்கத் தொடங்கி விட்டார்கள். இதை நல்ல வளர்ச்சியாகதான் பார்க்க வேண்டும்.
சமீபகாலமாக வில்லி கதாபாத்திரங்களைப் பெரும்பாலான நடிகைகள் விரும்பி நடிக்கிறார்கள். நீங்கள் எப்படி?
நெகடிவ், பாசிடிவ் என்று எந்த அடையாளமும் வைத்துக்கொள்ள ஆசை இல்லை. கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால் உடனே சம்மதிப்பேன். தெய்வம் தந்த வீடு தொடரில் நான் வில்லிக்கும், பாசிடிவ்க்கும் இடைப்பட்ட வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இது.
தொகுப்பாளினி, நடிகை எதில் மன நிறைவு இருக்கிறது?
இரண்டுமே எனக்கு பிடித்ததனால்தான் செய்கிறேன். தொகுப்பாளினியாக இருப்பதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது அந்த நேரம் நாம்தான் ராணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...