புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வில்லியாக நடிக்க விருப்பமில்லை! சொல்கிறார் : ரம்யா

"பெப்பர்ஸ்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சாட் வித் ரம்யா' என்ற நிகழ்ச்சியில் மக்களின்

News image
Updated On :16 மார்ச் 2016, 6:31 am

ஸ்ரீ

"பெப்பர்ஸ்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சாட் வித் ரம்யா' என்ற நிகழ்ச்சியில் மக்களின் பிரச்னைகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்கி வருவதன் மூலம் சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா மிகவும் பிரபலமாகியிருக்கிறார். அவரை சந்தித்தோம்:

Story image

தொகுப்பாளினி, நடிகை இதிலிருந்து கவுன்சிலிங் என்பது முற்றிலும் மாறுபட்ட வேறு துறை ஆயிற்றே?

 நான் படித்தது பி.ஏ. சோஷியாலஜி. அதில் ஒரு பாடமாக சைக்காலாஜி இருந்தது. அதனால் என்னால் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தக்கவாறு கவுன்சிலிங் கொடுக்க முடிகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கும் ஏதாவது ஒரு ஆலோசனை கிடைக்காதா? என்றுதான் என்னை தொலைபேசியில் அழைக்கிறார்கள்.  அவர்களுக்கு பயன்படும் வகையில் எனக்கு தெரிந்த ஆலோசனையை நான் வழங்குகிறேன்.

பொதுவாகவே ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு பிரச்னை என்று வரும்பொழுது அதைக்கண்டு பயந்து ஓடி ஒளியாமலும், நடந்துவிட்டதையே நினைத்துக் கொண்டு  இல்லாமலும், அடுத்து நடக்க வேண்டியதை நினைத்தாலே பிரச்னை படிப்படியாக நம்மை விட்டு விலகிவிடும். 

ஆனால் நிறைய பேர் செய்யும் தவறு என்ன தெரியுமா? ஒரு பிரச்னை என்றால் உடனே மாய மந்திரங்களைத் தேடிச் செல்வது, குருஜி, மகான் என்று தேடிச் செல்வது அல்லது தெரிந்தவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி அலைவது எல்லாம் நடக்கிறது. இது முற்றிலும் தவறு. "சாட் வித் ரம்யா' நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் இதுபோன்ற விஷயங்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன். என்னிடம் ஆலோசனை பெற்ற சிலர் மீண்டும் மீண்டும் என்னை அழைத்து பேசுகிறார்கள். அவர்கள் பிரச்னை தற்போது குறைந்திருப்பதாகவும் கூறு

கிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியைப் பார்த்த மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் பலரும் என்னிடம் நீங்க ஒரு மனோதத்துவ நிபுனரா? என்று விசாரிக்கிறார்கள். உங்களுடைய ஆலோசனை மிகவும் சரியானதாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்கள். இதில் சவாலான விஷயம் என்றால் அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிரச்னை ஒவ்வொரு விதத்தில் இருக்கும். அவர்கள் பேசி முடிப்பதற்குள் அவர்களுக்கான ஆலோசனையை நான் யோசித்துக் கொண்டு பதில் வழங்க வேண்டும்.

ஆண்டாள் அழகர் குறித்து?

ஆண்டாள் அழகர் தொடர் விரைவில் முடியும் தறுவாயில் இருக்கிறது. அதில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். என்னுடைய கேரக்டரை நிறைய பேர் விரும்பி ரசிக்கிறார்கள். நிறைய பாராட்டுகளும் வருகின்றது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் வெளிநாடு தமிழ் பெண்கள் சிலர் ஒன்றிணைந்து இணையத்தில் "ரம்யா ஃபேன் கிளப்' என்ற பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் "தினம் ஒரு திருக்குறள்' போன்ற நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் அந்தப் பெண்களுக்குள்ளாகவே ஒரு நட்பு வட்டத்தையும் உருவாக்கி வருகிறார்கள். அது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தற்கு ஆண்டாள் அழகர் தொடரின் இயக்குநருக்கும், விஜய் டிவிக்கும்தான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க பிடிக்குமா?

சினிமாவைப் பொறுத்தவரை வில்லி கேரக்டரில் நடித்து விடலாம். குறுகியகாலத்தில் அந்த கேரக்டர் முடிந்துவிடும். ஆனால், சின்னத்திரை தொடர்கள் அப்படியில்லை. பல ஆண்டுகள் மெகா தொடர்களாக வருவதால் வில்லி கேரக்டர்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. காரணம், முன்பு ஒரு சில தொடர்களில் வில்லியாக நடித்தேன். நெகட்டிவ்வாக நடித்து நடித்து ஒரு கட்டத்தில் என் நிஜ கேரக்டரே நெகட்டிவ்வாக மாறுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிலிருந்து நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதை தவிர்த்துவிட்டேன்.

 சினிமா வாய்ப்பு?

"மாஸ்', பாலுமகேந்திராவின் "தலைமுறை' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சில சீன்களாக இருந்தாலும் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

எதிர்கால திட்டம்?

எம்.பில் முடித்துவிட்டேன். அடுத்து பி.எச்.டி. இதைத் தவிர டைரக்ஷன் பக்கம் நிறைய ஆசை இருக்கிறது. விரைவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும். இதைத்தவிர வருங்காலத்தில் கவுன்சிலிங் வழங்கும் மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.