ஆரோக்கிய சமையல்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
Updated on
4 min read

ஓலன்

தேவையான பொருட்கள்:

அதிகம் பழுக்காத பூசணிக்காய் - 1/4 கிலோ

வெள்ளை பூசணிக்காய் - 1/4 கிலோ

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

தேங்காய்  - 1/2 மூடி (தேங்காய் பால் எடுக்க)

பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்

உப்பு - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 4

செய்முறை: பூசணிக்காயைச் சிறிய சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். சேப்பங்கிழங்கை  வேக வைத்து தோலுரித்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், தேங்காயைத் துருவி கெட்டியாகப்பால் எடுக்கவும். காய்கறிகளை உப்பு சேர்த்து, வேக விடவும். பாசிப்பருப்பையும் வேக வைக்கவும். இரண்டையும் சேர்த்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். ஓலன் ரெடி.

****
உருளைக்கிழங்கு ஜிலேபி

தேவையான பொருட்கள்:

 உருளைக்கிழங்கு : 1/2 கிலோ

தயிர் : 1 கிண்ணம்

ஆரோரூட் பவுடர் : 50 கிராம்

எலுமிச்சம்பழச் சாறு :  சிறிது

நெய் : 1/2 கிலோ

சர்க்கரை : 1/4 கிலோ

குங்குமப் பூ - சிறிது

 செய்முறை:  உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும். பாகு இறுகி வரும்போது குங்குமப் பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்.

 எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறு தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையில் எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு பிசைந்து, துவாரம் செய்துள்ள துணிக்குள் வைத்து, முறுக்கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும்.

 முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து, சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். உருளைக்கிழங்கு ஜிலேபி ரெடி.

****

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

 அரிசி மாவு - 2 கிண்ணம்

வெல்லம் (தூள் செய்தது) - 1 கிண்ணம்

தேங்காய் துருவியது  - 1/2 கிண்ணம்

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

சுக்குப் பொடி - 1/2 தேக்கரண்டி

குருத்துப் பனை இலைகள் - 10

 செய்முறை: அரை கிண்ணம் தண்ணீரில், வெல்லம் தூள் செய்து சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம்  கரைந்ததும், அதில் உள்ள கல் நீக்க, அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்குத்தூள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது சூடான தண்ணீர் சேர்க்கவும். மாவை சப்பாத்தி மாவை விட சற்று நெகிழ்வான மாவாக இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.

 பனை இலைகளை சுத்தம் செய்து 4 முதல் 5 அங்குலம் உள்ள நடுப்பகுதியை வெட்டி இலைகள் திறந்து, அகலவாக்கிலோ, நீளவாக்கிலோ மாவை வைத்து இலைகளை மூடி ஒரு தடித்த நூல் கொண்டு கட்டி, பிறகு  ஒரு இட்லி தட்டில் அதனை அடுக்கி பதினைந்து முதல் இருபது

 நிமிடங்கள்  நீராவியில் வேகவைக்க வேண்டும். கொழுக்கட்டை வெந்தவுடன் ஓலைகளை மெதுவாக எடுத்து விடவும்.  பனைஓலை கொழுக்கட்டை தயார்.

***

பீன்ஸ் உசிலி

தேவையான பொருட்கள்:

 பீன்ஸ் - 1/4 கிலோ

தேங்காய் - 4 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

எண்ணெய் - தாளிக்க

வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்.

செய்முறை: பீன்ûஸ பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து, உதிரி உதிரியாக மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு  தாளிக்கவும். பின்னர், நறுக்கி வைத்த பீன்ûஸ சேர்த்து நன்கு வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, உதிரியாக வேகவிட்டு எடுக்கவும். அத்துடன் அரைத்து வைத்த தேங்காய், வேக வைத்த துவரம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் இல்லாமல் நன்கு வதக்கி எடுத்தால் பீன்ஸ் உசிலி ரெடி.  பீன்ûஸ போன்று கொத்தவரங்காய், முட்டைகோஸ், வாழைக்காய், புடலங்காய் ஆகியவற்றிலும் செய்யலாம்.

*****

டொமேட்டோ கீ ரைஸ்

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 கிண்ணம்

வெங்காயம்,தக்காளி - தலா 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா 2.

முந்திரி - 5

தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்

நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: குக்கரில் நெய் விட்டு அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய், முந்திரி தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அரிசியை களைந்து சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கி, மேலே சிறிதளவு நெய்விட்டு கிளறி சூடாகப் பரிமாறவும்.

***

மணத்தக்காளி -அப்பளக் குழம்பு

தேவையானவை:

மணத்தக்காளி வத்தல் -  ஒரு கிண்ணம்

உளுந்து அப்பளம்  - 4

கடுகு -  அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு

சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தேவைகேற்ப

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும். இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். அத்துடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்து மல்லி சேர்க்கவும். பின்னர், அப்பளத்தைச் சிறு துண்டுகளாக வறுத்து குழம்பு

கொதித்ததும் அதில் போட்டு கலக்கவும்.

குறிப்பு: வாய்ப் புண், வயிற்றுப் புண் இருந்தால் இந்த மணத்தக்காளி குழம்பு குணப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com