புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எதை செய்தாலும் 100 சதவீதம் திருப்தி இருக்க வேண்டும்! சொல்கிறார் : ஸ்ரீத்திஜா

பாலிமர் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் "இரு மலர்கள்' தொடரின் நாயகியாக நடித்து வருபவர் ஸ்ரீத்திஜா. தமிழில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தி நடிகையான  இவரது சொந்த ஊர்

News image
Updated On :22 மார்ச் 2016, 6:46 am

ஸ்ரீ

பாலிமர் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் "இரு மலர்கள்' தொடரின் நாயகியாக நடித்து வருபவர் ஸ்ரீத்திஜா. தமிழில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தி நடிகையான  இவரது சொந்த ஊர் பிகார். ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது "தூம் மச்சாவோ தூம்' என்ற இந்தி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் இவர். படிப்படியாக வாய்ப்புகள் வர தற்போது இந்தி சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவராக மாறிவிட்டார். தமிழில், பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங்  சீரியலான "இரு மலர்கள்'  தொடரின்  மூலம் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியன் டெலி விருதுகள் 2015- இல் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.  இவ்விழாவில் இவரிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

Story image

விருது பெற்றிருப்பது குறித்து?

இந்த விருது என்னை இன்னும் ஊக்குவிக்கும், எனக்கு ஆக்ஷன் , கட் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் வேலை செய்வதென்றால் அவ்வளவு பிரியம். அதுதான் என்னை இங்கே நிற்க வைத்திருக்கிறது.

 "செüபாக்யவதி பவா', "பலிகாபது' சீரியல்களில் இருந்து பாதியில் விலகியது குறித்து?

  நான் செய்கிற எந்த வேலையானாலும் அதில் 100 சதவீதம் திருப்தி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி இல்லை என்றால், உடனே அதில் இருந்து விலகிடுவேன். அந்த சீரியல்களில் எனக்கு முக்கியத்துவம் குறைவது போன்று உணர்ந்தேன். அதனால்தான் அந்த ரெண்டு புராஜெக்ட்டில் இருந்தும் விலகினேன்.

உங்களுக்கு பிடித்தவை?

 என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்ளக் கூச்சப் படுகிற விஷயம், நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை... அதிகமாக சமோசா, தோசை சாப்பிடுவேன். அமீர்கானை ரொம்ப பிடிக்கும். அவரோடு ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். இதைத் தவிர பழைய படங்கள் பார்ப்பது  மிகவும் பிடித்தமான ஒன்று. சொல்லப்போனால் என்னுடைய பொழுதுபோக்கும் அதுதான். அத்தனை  பழைய படங்களின் சிடிக்கள், மூவி கலெக்ஷன்ஸ் வைத்திருக்கிறேன்.

 ஆனால் ஆக்ஷன் படங்களை மட்டும் பார்க்கவே மாட்டேன். எனக்கு சண்டை என்றாலே பயம் அதிகம்.  அதில் சாப்ளினின் ஆக்ஷன் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

இதுவரை அதிகம் ரசித்து பார்த்த படம் பியாசா. அதில் குருதத் நடிப்பு அபாரம். எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

உங்களுக்கு நெருங்கிய நண்பர்?

 ஆன் ஸ்கிரீன் ஜோடி, ஆஃப் ஸ்கிரீன் ஃப்ரண்ட் இப்படி ரெண்டுலயும் செம கம்பெனி ஷாபிர் அலுவாலியாதான். ரெண்டு பேரும் சேர்ந்தால் அங்கே, ஒரே கலாட்டாவாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். என் டான்ஸ் பார்ட்னரும் அலுவாலியாதான்.

உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் நிறைய வருகிறதே?

 கிசுகிசுக்கள் பற்றி நான் கவலைப் பட்டதே இல்லை. உண்மையல்லாத விஷயத்திற்காக எதற்கு கவலைப்பட வேண்டும். என்னுடன் நடிக்கும் சக தோழரான குனால் கபூருடன் என்னை இணைத்து கிசு கிசுக்கிறார்கள். ஆனால்,  நட்பைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை என்பதுதான் உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.