என் வாழ்க்கையில், நான் அறிந்த வரையில், நினைக்கவும் அஞ்சத்தக்கதான அனுபவங்கள் எனக்குச் சித்தித்திருக்கின்றன. இந்த அனுபவங்கள் என் ஒருத்திக்கு மாத்திரமேயன்றி சமூகம் முழுமையும் தழுவிப் பயன் விளைவிக்கும் என்று நான் நம்பினேன். இப்போதும் நம்புகிறேன்; அந்த அனுபவங்களின் திரட்சியைச் சமூக நலம் கருதி, எனக்குக் கை வந்திருப்பதாக நான் கருதும் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

வாழ்க்கையில் நான் காயங்கள் பட்டேன். ஆனாலும், அவை என்னை வடுப்படுத்தவில்லை; மாறாக, அவை என்னை வலிமைப்படுத்தின. அபிமன்யுவைப் போல் நான் வியூகமிடப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறேன். அது தாக்குதல் மட்டுமல்ல; ஈவிரக்கமற்ற குரூரம். அந்தக் குரூரங்களும் கொடுமைகளும் என்னை அடித்து வீழ்த்தவில்லை; கவலையால் ஓலமிடவில்லை. மாறாக அவை வளர, வளர நான் அவற்றுக்கு மேலாக வளர்ந்தேன். இந்த வேளையில்தான் என் மனதுக்குள் அதுவரை உறங்கிக் கிடந்த சிறுபொறி பெரு நெருப்பாய்ப் பரவியது. அந்த சமயத்திலேதான் எனக்கு எழுத வேண்டும் என்கிற மூர்க்கம் - அதை மூர்க்கம் என்பதைத் தவிர வேறு வார்த்தைகளால் குறிக்க முடியாது... உண்டாயிற்று.
என் உள்ளக் கிடக்கையை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற என் தவிப்பிற்கு ஒரு வடிகாலாய் நான் தேடிக் கொண்டதுதான் இந்த எழுத்துத்துறை. என்னை நெருக்கிய பிரச்னைகளின் இருளிலே நான் தடுமாறாமல் ஒளி காட்டும் வெளிச்சமாய், ரணகாயமுற்ற இதயத்தின் வேதனைக்கு மாற்று மருந்தாய் வந்த எழுத்து வடிவில் என் மனம் வடிகால் கண்டது.
கல்பனாதாசன் தொகுத்த "கண்ணதாசன் முதல்...' நூலில் திலகவதி ஐ.பி.எஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

