புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆடை அலங்காரத்துக்காகவே நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் : ஃபரீனா ஆஸாத்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "கிச்சன் கலாட்டா'  சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் ஃபரீனா ஆஸாத்.

News image
Updated On :3 மே 2016, 12:08 pm

ஸ்ரீ

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "கிச்சன் கலாட்டா'  சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் ஃபரீனா ஆஸாத். இந்நிகழ்ச்சியில் தினம்தினம் ப்ரீனா அணிந்து வரும் ஆடைகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கிச்சன் கலாட்டா ஷூட்டிங் இடைவெளியில் அவரைச் சந்தித்தோம்:

Story image

மீடியாவுக்குள் வந்த அனுபவம்?

 சிறு வயதில் இருந்தே டிவியில் வர வேண்டும் என்று ஆசை. நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது லோக்கல் டிவி சேனல் ஒன்றில் ஆங்கருக்கு ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு சென்று சேர்ந்தேன். அதன்பிறகு படித்துக் கொண்டே ஆங்கரிங் செய்து வந்தேன். அதன்பிறகு பனிரெண்டாம் வகுப்பு என்பதால் அங்கிருந்து நின்றுவிட்டேன். அதன் பிறகு கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது ராஜ்டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைக்க சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு புதியதலைமுறை, ஜி தமிழ்  சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தேன். இப்போது சன் டிவியில் கிச்சன் கலாட்டா தொகுத்து வழங்கி வருகிறேன். இதில் இயற்கையாக அமைந்த ஒரு விஷயம் என்னவென்றால் அத்தனை சேனல்களிலுமே சமையல் நிகழ்ச்சி தொகுத்து

வழங்கியதுதான்.

தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட்டு இருக்கீங்களே? நீங்க நல்லா சமைப்பீங்களா?

உங்களுக்கு பிடித்த உணவு எது?

 உண்மையை சொல்லணும்ன்னா இப்போதான் சமைக்கவே ஆரம்பித்திருக்கிறேன். கிச்சன் கலாட்டாவில் வந்த சில ரெஸிப்பிகளை வீட்டில் சமைத்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. அதிலிருந்து சமைப்பதில் ஆர்வம் வந்திருக்கு. நான் பயங்கரமான நான் - வெஜ் பிரியை. நான் குழந்தையா இருக்கும்போது செரிலாக்கில் கூட மீன் குழம்போ, கறிக் குழம்போ சேர்த்து ஊட்டினால்தான் சாப்பிடுவேனாம். அப்படின்னா நீங்களே யூகிச்சிக்கோங்க. இப்போ கொஞ்ச நாளாத்தான் காய்கறி எல்லாம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்.

விதவிதமான காஸ்ட்யூகளில் கலக்குகிறீர்களே? அதன் ரகசியம் என்ன?

 ரகசியம் எல்லாம் எதுவும் இல்லீங்க. சமையல் நிகழ்ச்சின்னா எப்பவுமே சல்வார், சேலைதான் அணிந்து வருவார்கள். அதனால் ஏதாவது  காஸ்ட்யூமில் வித்தியாசமாக அணியலாமே என்று முயற்சி செய்தோம். அது நன்றாக ஒர்க்கவுட் ஆகிவிட்டது. இப்போது  அந்த ஷோவுக்கு காஸ்ட்யூம்களுக்காகவே ரசிகர்கள் அதிகம். எங்கு வெளியே சென்றாலும் என் காஸ்ட்யூம் பற்றிதான் விசாரிக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

காஸ்ட்யூமுக்காக நிறைய மெனக்கெட வேண்டி

இருக்குமே?

காஸ்ட்யூமுக்காக தேடி அலைகிற வேலை எல்லாம் எனக்கில்லை.  இங்க ஸ்டூடியோவிலேயே காஸ்ட்யூம் டிசைனர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கு பொருத்தமாக வடிவமைத்து  கொடுக்கிறார்கள். நான் ஜாலியா போட்டுக்கிட்டு ஹாய்யா உங்க முன்னாடி வந்து நிற்கிறேன். அதனால்  நியாயமா இந்த கிரெடிட் எல்லாம் காஸ்ட்யூம் டிசைனருக்குத்தான் போய் சேரணும். அதுபோன்று சும்மா போட்டு பாக்கலாமேன்னு ஏதோ ஒரு பேண்டுக்கு ஏதோ ஒரு டாப், ஏதோ ஒரு டாப்புக்கு ஏதோ ஒரு ஸ்கர்ட்ன்னு மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்வோம். அது ஹிட் ஆகிடும். தோடு, நெக் செட்ன்னு எதுவும் தேடி வாங்கினதில்ல. ஷாப்பிங் போகும்போது பாக்க பிடிச்சுருந்தா வாங்குவேன். அது ஏதாவது ஒரு டிரஸ்க்கு கச்சிதமா பொருந்திடும்.

ஆனா,  ஒரு விஷயம் என்னன்னா? இப்போது ரியாலிடி ஷோவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி காஸ்ட்யூமுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  ஆடை ஆபரணங்கள் பார்க்கவே  நிறைய பேர் இப்போ சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொருத்தவரை ரெஸ்பான்ஸ் நல்லா வரவே, நம்மள நோட் பண்ணறாங்களேன்னு ட்ரெஸ் பண்ண ஆரம்பித்தேன். மக்கள்கிட்ட அதிக வரவேற்பு கிடைத்ததால இப்போது ஷோ நடத்துபவர்களும் அதுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

நடிப்பு ஆர்வம் இருக்கா?

 இப்போதைக்கு நடிப்பு பக்கம் வரும் ஆர்வம் எல்லாம் இல்லை. வருங்காலத்தில்  நல்ல வாய்ப்பு கிடைத்தால்  பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.