சீரியல்களின் நடிப்பு என்பது ஒரு கேள்விக்குறி. இது எத்தனை நாள் நீடிக்கும் என்றொரு எண்ணம் வந்தது. அதுவும் நடிப்புத்துறையை பொருத்தவரை பெண்களுக்கு ரொம்ப லிமிடெட் பீரியடுதான். அதற்குப் பிறகு வாழ்க்கை முழுவதற்கும் ஏதாவது வேண்டும் என்றும் யோசித்தபோதுதான், "லெட் டான்ஸ்' என்ற பெயரில் டான்ஸ் பள்ளி ஆரம்பித்தேன். இங்கு டான்ஸ் மட்டுமில்லாம யோகா, ரூபா என்கிற ஃபிட்னஸ் எல்லாம் இருக்கு. முக்கியமாக திருமணமான பெண்கள் முதல் 60 வயது பெண்கள் வரை இதை செய்யலாம். இதனால் அவர்களது உடம்பை நல்ல ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும்.