கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

களை கட்டுகிறது... திருமண சீசன்!

எங்களுக்குள் காதல் இல்லை.. இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு , மரியாதை உண்டு.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:43 pm

அங்கவை

எங்களுக்குள் காதல் இல்லை.. இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு , மரியாதை உண்டு. அதனால் நட்பில் இருக்கிறோம்..' என்று சொல்லி வந்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம். 

காதலிக்கும் போதே "பத்மாவதி' படத்தில் ரன்வீர் ஒருதலையாக காதலிக்கும் வில்லனாக வந்தவர். படம் வெற்றி பெரும் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீபிகாவுடன் மாலத்தீவுகள் சென்று வந்தார். உடன் இருவரின் பெற்றோர்களும் இருந்தனர் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவரின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்களாம். நான்கு திருமண நாள் தேதியையும் தேர்ந்தெடுத்துவிட்டார்களாம். ஆனால் திருமணத்தை இந்தியாவில் வைப்பதா?. வெளிநாட்டில் வைப்பதா? என்று முடிவு செய்யவில்லையாம். ஆனால், திருமணம் எங்கு நடந்தாலும் மிக மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு போகுமாம்..! 

திருமண வேலைகள் தொடங்கும் முன் தீபிகா திருமணத்திற்கான உடைகள், நகைகள் வாங்குவதில் மும்முரம் காண்பிக்க.... திருமணம் இந்த டிசம்பருக்குள் நடக்கும் என்று பாலிவுட்டில் அடித்துச் சொல்கிறார்கள்.

நடிகர் அனில் கபூரின் மகளான நடிகை சோனம் கபூரும் தனது சிறு வயது தோழரான ஆனந்த் அஹுஜா என்பவரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். 

ஆக... மொத்தத்தில் பாலிவுட்டில் திருமண சீசன் களை கட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.