மனிதர்களில் ஒருவரைப்போன்று மற்றொருவர் இருப்பதில்லை. அதுபோலவே மனிதர்களின் கையெழுத்தும். ஒருவரின் கையெழுத்தைப் போன்று மற்றவரின் கையெழுத்து இருப்பதில்லை. சிலர் முத்துமுத்தாக எழுதுவார்கள், சிலர் குண்டு குண்டாக எழுதுவார்கள், சிலர் சாய்த்து சாய்த்து எழுதுவார்கள், சிலரின் கையெழுத்து தொடங்கிய நேர்க்கோட்டில் செல்லாமல் பக்கவாட்டில் பயணித்து முடியும், சில கோழி கிறுக்கல்களும் உண்டு இவ்வாறு கையெழுத்தில் பல வகை உண்டு. அதே சமயம் கையெழுத்துக்கும், தலையெழுத்துக்கும் முடிச்சிடுபவர்களும் பலர் உண்டு. எது எப்படியிருந்தாலும் அழகான கையெழுத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி அழகாக எழுத பயிற்சி தருவதுதான் காலிகிராஃபி (அலங்கார எழுத்துப் பயிற்சி). காலங்கள் பல கடந்து வந்தாலும், அதன் நவீனத் தன்மை இன்னும் நிலை குலையாமல் இருப்பதே அதன் சிறப்பு. அப்படிப்பட்ட அலங்கார எழுத்துக்களைத் தன் வசம்மாக்கிக் கொண்டு மிக அநாயசமாக கையாளுகிறார் சென்னை, சௌகார்பேட்டையைச் சேர்ந்த ராஜலட்சுமி. பல ஆண்டுகளாக காலிகிராஃபி பயிற்சியாளராக இருக்கும் இவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நான் பள்ளி பருவத்தில் இருந்தபோது சம்மர் கிளாஸ்க்காக சென்று காலிகிராஃபியை கற்றுக் கொண்டேன். காலிகிராஃபிங்கிறது ஒருவகையான எழுத்துமுறை. கறுப்பு மற்றும் நீல நிறத்திலான பிரத்யேக பேனாக்கள் வைத்து எழுதுவது. இதற்கென்று தனி ஃபான்ட்ஸ் (FONTS) இருக்கும். அதிலேயே மெலிதானது, திக்கானது என்று இரண்டு வகை இருக்கிறது. காலிகிராஃபியில் எழுதுகிறபோது அந்த ஸ்டைல் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.
எனது பள்ளி பருவம் முடிந்து , கல்லூரி சென்றதும் என் எழுத்துகள் பார்ப்பவரை ஈர்க்க தொடங்கின. அதுவே, கல்லூரியில் எனக்கென்று தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. கல்லூரியில் சர்ட்டிஃபிகேட் எழுத, இன்விடேஷனில எழுத, பேனர் எழுதன்னு எல்லாவற்றிற்கும் என்னைத்தான் எழுதி கொடுக்கச் சொல்வார்கள். என் எழுத்தைப் பார்த்துவிட்டு என் தோழிகள் பலரும் இதை எப்படி எழுத வேண்டும் என்று ஆர்வமாக கேட்பார்கள். அப்போதே சிலருக்கு பயிற்சி அளித்தேன்.
பின்னர், எம்.பில் முடித்ததும் திருமணம், குழந்தைகள், குடும்பம் என பொறுப்புகள் அதிகமானதால் காலிகிராஃபியை பயன்படுத்த நேரமில்லாமல் போனது. ஒருகட்டத்தில் எனக்குள் இருக்கும் இந்தக் கலை என்னோடு அழிந்து விடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.
காலிகிராஃபி பார்ப்பதற்கு மட்டும் அழகு அல்ல... இது குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கக்கூடியது. நினைவாற்றலை பெருக்கும். பொறுமையை கற்றுத் தரும்.
மேலும், பள்ளி, கல்லூரி பிள்ளைகளின் புராஜெக்ட் வொர்க், ரெக்கார்டு வொர்க், கிரீட்டிங் கார்டு எல்லாம் காலிகிராஃபி ஸ்டைல்ல எழுதினா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அதனால் காலிகிராஃபி கைத்தொழிலாக மாறி வாழ்வாதாரத்துக்கான வழிகாட்டியாகவும் இருக்கும். காலிகிராஃபி கற்றுக் கொள்ள ஒருநாள் பயிற்சி போதுமானது. தொடர்ந்து எழுதிப் பழகினால் பளிச்சிடலாம்'' என்கிறார் ராஜலட்சுமி.
- ரிஷி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



