திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பார்பி பொம்மை: லேட்டஸ்ட் தகவல்கள்! 

சமீபத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பார்பி பொம்மை தயாரிப்பாளர் மட்டெல்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:01 am IST

சமீபத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பார்பி பொம்மை தயாரிப்பாளர் மட்டெல். புதிதாக 17 பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இவை "ஷெரோயஸ்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பார்பி பொம்மைகள் பெண்கள் கலை , விமானம், கணிதம் மற்றும் பல துறைகளில் சாதித்த பெண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இனி, பார்பி பொம்மைகளைப்பற்றி மேலும் பல அறிய வேண்டிய தகவல்கள்:
 முதல் பார்பி பொம்மை 1959 -ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அறிமுகமானது. இதனை, அமெரிக்க வியாபாரி மென்ரூத் ஹான்டிலர், அந்த சமயத்தில் ஜெர்மனியில் பிரபலமாய் இருந்த பில்ட் லில்லி என்ற பெண் பொம்மையைப் பார்த்துதான் வடிவமைத்துத் தந்தார்.
 1959-இல் பிரபலமாக இருந்த குதிரைவால் கொண்டைதான், முதல் பார்பியின் ஹேர் ஸ்டைல். முதல் பார்பி பொம்மை அமெரிக்காவில் 3 டாலருக்கு கொடுக்கப்பட்டது. இதே பார்பி பொம்மை, 2006-இல் ஏலத்துக்கு வந்தபோது கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா? 27, 450 டாலர்.
 பார்பிக்கு பிடித்த வளர்ப்பு பிராணி குதிரை. பார்பிக்கு பிடித்த வெளிர் ஊதா வண்ணம். அடிக்கடி இந்த வண்ணத்தை அவளது உடையில் காணலாம். 1992- இல் உருவாக்கப்பட்ட பார்பி பொம்மையின் ஹேர் ஸ்டைல், தலையிலிருந்து கால்வரை இறங்கியிருந்தது.
 இதுவரை தயாரிக்கப்பட்ட பார்பியிலேயே மிகவும் விலை உயர்ந்தது. ஆஸ்திரேலிய நகை வியாபாரியுடன் இணைந்து உருவாக்கப்பட்டதுதான். 2010-இல் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷனுக்கு, நிதி உதவி பெற, இது ஏலத்திற்கு விடப்பட்டது, 3,02,500 டாலருக்கு விலை போனது.
 மனிதன் 1969-இல் தான், சந்திரனுக்குச் சென்றான். பார்பியை 1965லேயே சந்திரனுக்கு அனுப்பிவிட்டனர்.
 தங்க இழைகளால் நெய்யப்பட்ட, 5000 பேர் சேர்ந்து கையினாலேயே உருவாக்கப்பட்ட பொம்மை, அமோகமாக விற்பனையானது.
 1992- ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறை ஜனாதிபதி தேர்தலில், தன்னையும் ஒரு வேட்பாளராக அறிமுகப்படுத்தி போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற்றதில்லை.
 உங்களுக்கு தெரியுமா? புதிய பார்பி பொம்மையை உருவாக்க ஒவ்வொரு தடவையும் 100 பேர் உழைக்கின்றனர்.
 அமெரிக்காவில் பொம்மை விற்பனையில் முதலிடம், பார்பிக்குதான்.
 பார்பி பொம்மை வடிவமைப்பில் இதுவரை 40 நாடுகளின் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 3 விநாடிக்கு ஒரு பார்பி பொம்மை விற்கிறது. வருடத்திற்கு ஒண்ணரை கோடி பார்பி பொம்மைகள் விற்பனையாகின்றன. 1959-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 1,00,5250,000 பார்பிகள் விற்றுள்ளன.
 - ராஜிராதா
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.