/
- தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.
- தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பின் பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை நீர் விடாமல் அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கி கலக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால் தக்காளி சட்னி போல் இருக்கும். தோசை, இட்லி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
- நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய வைத்தால் வத்தல் ரெடி.
- கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
- பூரிக்கு மசால் தயாரிக்கும் போது வழக்கமான முறையில் செய்வதற்குப் பதில் உருளை கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொண்டு சிறிதளவு தேங்காய், சிறிதளவு சீரகம், வெங்காயம், நான்கு (அ) ஐந்து மிளகாய் வற்றல் இவைகளை மிக்ஸியில் அரைத்து கிரேவி மாதிரி தயார் செய்து மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்தால் அபார ருசியுடன் கலக்கலாக இருக்கும்.
- பாசிப்பருப்பை வேக வைத்து ஏலப்பொடி வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கி மைதாவை கரைத்து இந்த பாசிப்பருப்பு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- கத்திரிக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி கொஞ்சம் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு போட்டு நன்கு பிசிறி விட்டு எண்ணெய்யில் போட்டு எடுக்க சுவையான மொறு மொறுப்பான கத்திரிக்காய் சிப்ஸ் தயார்.
- கேரட்டில் சூப் செய்தால் அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் திக்காக குழம்பிக் கொண்டு பார்க்க அழகாகவும் இருக்கும்.
- பூரி மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென்றும், சுவையாக இருக்கும்
எளிய சமையல் குறிப்புகள் -நூலிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



