* கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
* வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருக்காமல், ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
* பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
* கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல் சூடு மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. இதனால் தாய்லாந்தில் கர்ப்பிணி பெண்களின் தினசரி உணவில் வாழைப்பழ ரெசிபிகள் விதவிதமாக இருக்குமாம். மேலும், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
* கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பெல்ட்டை அணியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


