கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொப்பையை குறைக்க!

பொதுவாகவே குறிப்பிட்ட  வயதுக்கு பிறகு அனைவருக்கும்  உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில்  மட்டும்   அதிக எடை   கூடும்.

Published On :


பொதுவாகவே குறிப்பிட்ட  வயதுக்கு பிறகு அனைவருக்கும்  உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில்  மட்டும்   அதிக எடை   கூடும். வயிற்றில் வாயு மற்றும் கொழுப்பு அதிகம் சேருவதால்தான் வயிறு பெருத்து தொப்பையாக காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட, தொப்பையை குறைக்க  சில பழங்கள் உதவுகிறது.  அவை என்னவென்று பார்ப்போம்:

இஞ்சி,எலுமிச்சை சாறு: தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான  நீரில்  எலுமிச்சைச்  சாறு கலந்து சர்க்கரைக்கு  பதில் தேன் கலந்து குடித்து வர,  ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின்  "சி' கொழுப்பை வேகமாக கரைக்கும்.

அன்னாசிப் பழம்: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது.  ஜீரண சக்தியை அதிகமாக்கும்.  அன்னாசி கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

தக்காளி: கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமாக  மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனால் கொழுப்பு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது. எனவே,  தக்காளியை ஜூஸ்ஸாகவோ  அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.

திராட்சை: உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது.  திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட்  எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப்  திராட்சை  எடுத்துக் கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.