ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

எளிய மருத்துவம்!

பிரசவமான பெண்களுக்கு அடி வயிற்றில் வலியிருந்தால், முடக்கறுத்தான் (முடக்கத்தான்) இலையை நன்றாக அரைத்து, அடி வயிற்றில் பற்றுப் போட்டால் வலி தீரும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

• உடல் உறுப்புகளில் வலி, சுளுக்கு இவை தீர, வாதநாராயணன் (வாதமடக்கி) இலை, பேய் மிரட்டி இலை, நொச்சிவேர் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, வலியுள்ள இடங்களில் தடவினால் வலிகளும், சுளுக்குகளும் குணமாகும். 

• பிரசவமான பெண்களுக்கு அடி வயிற்றில் வலியிருந்தால், முடக்கறுத்தான் (முடக்கத்தான்) இலையை நன்றாக அரைத்து, அடி வயிற்றில் பற்றுப் போட்டால் வலி தீரும்.

• கீழே விழுந்து அடி பட்டதால் ஏற்படும் வீக்கம், வலி இவை தீர, முடக்கறுத்தான் (முடக்கத் தான்) இலையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, இளஞ்சூட்டில் தேய்த்தால் வலி, வீக்கம் மறையும். 

• கல்யாணமுருங்கை இலையை அரைத்துப் பிழிந்து சாறாகவோ, இலைகளை கீரை மசியலாகவோ செய்து சாப்பிட்டால், சீதபேதி, சிறுநீர் எரிச்சல், வயிற்று வலி, கீல்வாதம் ஆகியவை குணமாகும். பெண்களுக்குத் தாய்ப்பால் பெருக இது ஓர் அருமருந்து.

• அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை போன்ற பித்த நோய்கள் அகலும்.

• ஒரு டம்ளர் பாலுடன், இரண்டு ஸ்பூன் இஞ்சிச் சாற்றைக் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்து இரவு படுக்கப் போகுமுன் அருந்தினால் பித்த மயக்கம் தீரும். 

• சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தட வினால், மூட்டு வலி குணமாகும்.

• தூதுவளை இலையைக் கஷாயம் செய்து, அதில் தேன் கலந்து அருந்தினால், சளித் தொல்லை தீரும். ஆஸ்துமா, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

• வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்.

• தோலில் காணப்படும் கரும்படை நோய் தீர, கசகசாவை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து தடவினால் பலன் கிடைக்கும். 

• மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி, இரத்தபேதி, மூல நோய் குணமாகும்.
- கிரிஜா நந்தகோபால், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.