
கம்பளித் துணிகளை வெது வெதுப்பான நீரில்தான் அலச வேண்டும். முறுக்கிப் பிழியக் கூடாது. லேசாகப் பிழிந்து அப்படியே நீர்வடியும்படி கயிற்றில் போட்டுவிட வேண்டும். வெயிலில் உலர்த்தக் கூடாது. கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதுதான் வழி.
கம்பளித் துணிகளை வைக்கும் பெட்டியில் படிகாரத்தைத் தூள் செய்து மெல்லிய துணியில் முடிச்சாக முடிந்து போட்டு வைத்தால் பூச்சி அரிக்காது.
கம்பளித் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது நவச்சாரம் கலந்து கொண்டால் துணியின் அழுக்கு நீங்கிப் புதிதாகத் தெரியும். அதே சமயம் பூச்சியும் அரிக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.