ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சரஸ்வதி பஞ்சு

  • வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக் கீரை சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
  • கீரையுடன் பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கிண்ணம் பால் அல்லது தேங்காய்ப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
  • காரக்குழம்பு தயாரிக்கும்போது அதிகம் தண்ணீர் சேர்த்துவிட்டால் ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை அரைத்துச் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.
  • வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவற்றை பொரித்து எடுக்கும்போது நான்கு துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
  • அடைக்கு ஊற வைக்கும்போது ஒரு பிடி கோதுமையையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுவெனவும் வாசனையாகவும் இருக்கும்.
  • ரசத்துக்கு புளி கரைக்கும்போது அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். ரசம் கமகமவென்று மணக்கும்.
  • அரைத்து விட்ட சாம்பார் செய்யும்போது அரைக்க வேண்டிய பொருள்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
  • முட்டைக்கோûஸ வேக வைக்கும்போது அதனுடன் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்தால் அதிலுள்ள பச்சை வாடை மறைந்துவிடும். ஜீரணத்துக்கும் நல்லது.
  • தக்காளி சட்னி செய்யும்போது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும்.
  • சட்னி அல்லது துவையலுக்கு தேங்காய் இல்லாமல் போனால் சேனைக் கிழங்கைச் சேர்த்து அரைக்கலாம், சுவையாக இருக்கும்.
  • சாஸ் தயாரிக்கும்போது மைதா மாவுக்குப் பதில் கோதுமை மாவு கலந்து தயாரித்தால் சுவையாக இருக்கும், நார்ச்சத்தும் அதிகமாகக் கிடைக்கும்.
  • சாதத்துக்கு தண்ணீர் கொதிக்கும்போது அரிசி போடுவதற்கு முன்பு சில துளி சமையல் எண்ணெய் விட்டால் சாதம் பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
  • தோசை கல்லில் ஒட்டிக் கொண்டு வர மறுக்கிறதா? தோசை மாவில் அரை கிண்ணம் ரவையைக் கலந்து 15 நிமிஷங்களுக்குப் பிறகு தோசை வார்த்தால், கல்லில் ஒட்டவே ஒட்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.