மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! - 46: நலம் தரும் நாப்கின் தயாரிப்பு!

கடந்த 2008 -ஆம் ஆண்டு,   நாங்கள்  உருவாக்கிய 300  மகளிர்   சுய உதவிக்குழு மகளிருக்கு  நிறைய   தொழில்  பயிற்சிகள்   அளித்து   அவர்களுக்கு வங்கிகளில்  கடன்  உதவியும்   பெற்றுத் தந்தோம்.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 8:08 am

ஸ்ரீ

கடந்த 2008 -ஆம் ஆண்டு,   நாங்கள்  உருவாக்கிய 300  மகளிர்   சுய உதவிக்குழு மகளிருக்கு  நிறைய  தொழில்  பயிற்சிகள் அளித்து  அவர்களுக்கு வங்கிகளில் கடன் உதவியும்  பெற்றுத் தந்தோம்.  ஆனால்  எவரும்  தொழில் தொடங்க எந்த ஒரு முயற்சியும்  எடுக்கவில்லை. பிறகு  நாங்கள் ஒரு முடிவு  எடுத்தோம். யார் யாருக்கு பிசினஸ்  செய்ய எண்ணம்   உள்ளதோ அவர்களை மட்டும்   அழைத்து அவர்களுக்கு மட்டும்   மூன்று   விதமாக   பிசினஸ்  ஐடியா தந்தோம்.  

மளிகை சாமான் விற்பனை, வத்தல், வடாம், அப்பளம் தயாரித்து விற்பது. நாப்கின் தயாரிப்பு என ஒவ்வொரு ஏரியாவிலேயும் 10 பேர் கொண்ட குழுக்களாக  பிரித்து  அவர்களுக்கு வங்கியில்  தனியே   கணக்கு ஆரம்பித்து, அவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம்  லோன்   பெற்று   தந்து  பிசினஸ் செய்ய சொன்னோம்.   இதில்  மளிகை   சாமான்,  வத்தல், வடாம்,  அப்பளம்   தயாரித்தல் பயிற்சியும், அதற்கான தொழிலையும் உடனடியாக தொடங்கப்பட்டுவிட்டது.  

ஆனால்,  நாப்கின்   தயாரிப்பு   பற்றிய  விவரம் எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. எனவே, அதற்கான தேடலில் இறங்கினோம். அப்போது தான்  சென்னையில்   உள்ள ஒரு அமைப்பு   நாப்கின் பயிற்சியை  இலவசமாக வழங்க   முன் வந்தனர்.  

பொதுவாக சாதாரண நாப்கின்கள் உபயோகித்தால்  ஒரு சிலருக்கு  அரிப்பு, எரிச்சல், நீர்க்கட்டி, ஏன் கேன்சர் கூட  வர வாய்ப்பு  உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் இயற்கை  முறையில்  முந்தைய காலங்களில் பெண்கள் துணிகளை உபயோகப்படுத்தியதை மனதில்  கொண்டு அதுபோன்று  ஏதாவது  முயற்சி செய்து பார்ப்போம்  என்று   நினைத்தோம். 

ஆனால், இன்றைய  அவசர  யுகத்தில் அதற்கெல்லாம் யாருக்கும்  நேரம் இருக்காது என்பதால்,  இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மூலிகை நாப்கின் தயாரிப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டோம்.    தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு இந்தப் பயிற்சி பயன்படலாம்.  மேலும், எப்போதும் வருமானம் கொடுக்கக் கூடியத்  தொழிலாகவும் இது இருப்பதால்  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்''  என்கிறார்  சுயதொழில் ஆலோசகர்  உமாராஜ்:

துணி நாப்கின்

முதலில்  வீட்டில் உள்ள பழைய காட்டன் புடவைகளை வைத்து செய்து பாருங்கள்.  

செய்முறை:

துணியை  நாப்கின்  வடிவில்  வெட்டிக் கொள்ளுங்கள். இதையே 8 லேயர்களாக ஒன்றன் மீது ஒன்றாக  வைத்து  அடுக்கி  பிறகு  தையல் மிஷின் கொண்டு ஓரங்களை  தைத்து  விடுங்கள்.  அவ்வளவுதான். இது நன்கு பழகியப் பிறகு, பல வண்ணங்களில் காட்டன் துணிகளை  வாங்கி வந்து, அதில்  இதே முறையில் செய்து துணி நாப்கின்களை  தயாரிக்கலாம்.

பெண்கள் வீட்டிலிருக்கும் போது  இந்த துணி நாப்கினை உபயோகப்படுத்திவிட்டு மீண்டும்  மறுசுயற்சி செய்தும்  உபயோகப் படுத்தலாம்.  இது உடலுக்கு  தீங்கு  விளைவிக்காது. 

மூலிகை நாப்கின் 

இதற்கு  தேவையான  பொருட்கள்  பருத்தி காட்டன்,  ஜெல்லுக்கு பதிலாக கற்றாழை,  வேப்பிலை,  துளசியை   காய வைத்து கலந்து அரைத்தப்  பொடி. பிறகு  அன்டர்பேட் அதாவது நீர் உறிஞ்சும் துணி என்று  பிரத்யேகமாக கடைகளில்  விற்கும்  காட்டன் துணி,  கம்,  இதன்மேல் ஒட்டக் கூடிய ஷீட்,  இது பட்டர்  ஷீட்  போன்று இருக்கும்.

செய்முறை:

முதலில்  அன்டர் பேடை  கீழே  வைத்து அதன் மீது  இயற்கை  பொடிகளை தூவி அதன் மீது பருத்தி  காட்டன் வைத்து பிறகு  அதைச் சுற்றி  காட்டன் துணி வைத்து அயன்  செய்யலாம் அல்லது  தையல்  மிஷினில்  வைத்து தைக்கலாம். பின்னர்,  கம் தடவி  ஆறவிட்டு பின்னர் அதன்மீது  பட்டர் ஷீட் ஒட்டி விடவும். 

இயற்கை முறையில்  நாப்கின் தயாரிப்பது  எப்படி  என்பதை  நீங்கள் தெரிந்து கொள்ளவே இதை சொல்லி இருக்கிறேன். இதற்கான பயிற்சிகள் பல இடங்களில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு முறையாக பயிற்சி பெற்ற பின் செய்வது  நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.