12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அவரைக்காயும்..  அரிய மருத்துவ குணமும்!

அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி, நரம்பக்கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம்.

Published On :

அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி, நரம்பக்கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் சோர்வு ஏற்படாமல் தடுத்து உடலைப் பாதுகாக்கும்.

அவரைக்காயில் காணப்படும் நார்ப்பொருள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். 

அவரைக்காய் வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

சளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுபவர்களுக்கு அவரை சூப் நல்ல பலனைக் கொடுக்கும்.

ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அடிக்கடி அவரைக்காய்களை பயன்படுத்தி வர, இதிலுள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்தக் குழாய்களில் கொழுப்புப் பொருட்கள் அடைத்துக் கொள்வதையும் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.       

தூக்கமின்மையால் அவதிபடுவோர்கள் இரவு உணவில் அவரைக் காய்களை பயன்படுத்தி வர சுகமான தூக்கம் கிடைக்கும்.

நீரழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை நீங்கும்.

இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

வயதானவர்கள் அவரைக்காய்களை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர தசைநார்கள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி முதுமையில் நோய்களின் தாக்கமும் குறையும்.

நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பலத்தை கொடுப்பதுடன், விரத காலத்தில் மனஅமைதியை அதிகரித்து சிந்தனையை தெளிவுப்படுத்தும்.

"காய்கள், கனிகள், கீரைகள், தானியங்கள்' என்னும் நூலிலிருந்து,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.