தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இது புதுசு

இயக்குநர் கல்யாண்  முதன் முதலாக  இயக்கிய  "குலேபகாவலி'  படத்தில் நடித்த ஹன்சிகா,  மீண்டும்  அவரது இயக்கத்தில்  உருவாகும்  புதிய திகில் படத்தில்  காவல்துறை அதிகாரியாக  நடிக்கிறார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2019, 7:29 pm IST


காவல்துறை  அதிகாரியாக  ஹன்சிகா

இயக்குநர் கல்யாண்  முதன் முதலாக  இயக்கிய  "குலேபகாவலி'  படத்தில் நடித்த ஹன்சிகா,  மீண்டும்  அவரது இயக்கத்தில்  உருவாகும்  புதிய திகில் படத்தில் காவல்துறை அதிகாரியாக  நடிக்கிறார். இவரைச் சுற்றிலும் பேய்கள் தொல்லை கொடுக்கும் நகைச்சுவை பாத்திரம்  என்பதால்  ஹன்சிகாவுக்கு ஜோடி யாரும் இல்லையாம். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்துக்கு "காற்றின் மொழி' இசையமைப்பாளர் காஷிப் இசையமைக்கிறார்.

தென்னிந்திய படங்களுக்கு விசிட்டிங் கார்டு

"ஆர்டிகல்  15' என்ற  படத்தில்  நடித்துள்ள  இஷா தல்வார், ஏற்கெனவே மலையாளத்தில் "தட்டத்தின் மரயத்து' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவரது  தந்தை வினோத்  தல்வார்  80 மற்றும்  90களில் குறைந்த பட்ஜெட்டில் திகில் படங்களை எடுத்தவர். "" தயாரிப்பாளர் என்ற முறையில்  என்னுடைய தந்தை 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். வெற்றிகரமான தயாரிப்பாளர் குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தால் வரவேற்பு வேறு மாதிரி இருக்கும். இல்லையென்றால்  மற்றவர்கள் போல் போராட வேண்டிவரும்.  தென்னிந்திய படங்களில்  நடிக்க  இது எனக்கொரு விசிட்டிங் கார்டு''  என்கிறார்  இஷா தல்வார். 

பிரியங்கா சோப்ரா படத்துக்கு தேசியவிருது

பிரியங்கா  சோப்ரா  மராத்தி  மொழியில்  தயாரித்த "பானி' என்ற  படம், சிறந்த  சுற்றுச் சூழல்  பாதுகாப்பு  படங்களுக்கான  பிரிவில்  தேசிய விருதை பெற்றுள்ளது.  ""பொழுது   போக்காகவும்  அதே சமயம்  சமூக  கருத்துகளை கூறும் படமாகவும்  இருக்க வேண்டும்  என்ற எண்ணத்தில்  புதிய  இயக்குநர் ஆதிநாத் கோதரேவுக்கு வாய்ப்பளித்து எடுத்த "பானி' தேசியவிருது பெறுமென எதிர்பார்க்கவில்லை.  மேலும்  கருத்துள்ள படங்களை எடுக்க இந்த விருது தூண்டுகோலாக உள்ளது'' என்று  கூறும் பிரியங்காவின் முந்தைய தயாரிப்பான  "வென்டிலேட்டர்'  என்ற மராத்தி  படமும்  2016= ஆம் ஆண்டு மூன்று  தேசிய விருதுகளை  பெற்றுள்ளது.

அஜித்துடன்  நடித்தது எனக்கு  கிடைத்த போனஸ்

""ரீமேக்  படங்களில்  நடிப்பதில்லை என்ற என்னுடைய கொள்கையை  "நேர் கொண்ட பார்வை' படத்திற்காக மாற்றிக் கொண்டது உண்மைதான். இன்றைய சமூகத்திற்கு தேவையான கதை என்பதால், நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும்  ஸ்ரீதேவி  மீது எனக்கிருந்த  அன்பும் ஒரு காரணமாகும். தமிழில் முதன்முதலாக  நடிக்கும்போது அஜித்துடன்  நடித்தது எனக்கு கிடைத்த போனஸ் ஆகும். ஒரிஜனல் இந்தியிலிருந்து தமிழுக்கு ஏற்றபடி கதையை அமைத்ததால் அஜித்தின் மனைவி கல்யாணியாக நடிக்கும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது. பிற மொழிகளிலும் இந்த படத்தை தயாரிப்பது நல்லது'' என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.

உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் நடிகை!

"கேதார்நாத்',  "சிம்பா' ஆகிய  படங்கள்  மூலம்  பிரபலமான சாரா அலிகான், அடுத்து 1995=ஆம்  ஆண்டு  வெளியான  "கூலி நெ.1'  படத்தின்   ரீமேக்கில் வருன் தவானுடன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு  துவங்கிய  நிலையில்  சாரா மட்டும் படப்பிடிப்புக்குப் போகாமல் தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இவர் முதன் முதலில்  நடிக்க வந்த போதே  90 கிலோ  எடை இருந்தாராம். இவருக்கு  "பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்' என்ற ஹார்மோன் பிரச்னை காரணமாக எடை கூடுவதால், உடல் எடையை குறைப்பது சுலபமல்ல என்றாலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.