முகத்திற்கு அழகு கொடுப்பதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பொதுவாக பெண்கள் அனைவருக்குமே உதடுகள் மென்மையாகவும் பட்டுப்போன்றும் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் கடைகளில் விற்கப்படும் "லிப் பாம்கள்' மற்றும் செயற்கை ஊசிகள்,கிரீம்கள் போன்றவற்றை உபயோகித்து உதட்டின் இயற்கை தன்மையை கெடுத்து கொள்கின்றார்கள். அப்படி செய்யாமல் , வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து, உதட்டை மென்மையாக பராமரிக்கலாம். அது எப்படியென்று பார்ப்போம்:
தினமும் காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது பேக்கிங் சோடாவை வைத்து, உதட்டின் மீது, மென்மையாக தேய்த்து வந்தால், உதடுகள் வறட்சியடையாமல், மென்மையாக இருக்கும்.
உதட்டில் சிறிது தேன் அல்லது ஆமணக்கெண்ணெய்யை தேய்த்து வந்தால், உதடுகள்எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும்.
வறட்சியின் காரணமாக இரவில் படுக்கும் முன் வாஸ்லினை சிலர் தடவுவார்கள். ஆனால் அவ்வாறு வாஸ்லினை தடவும் முன் அன்னாசிப்பழ ஜூûஸ தடவி, பின்னர் வாஸ்லினைத் தடவ வேண்டும்.
கிரீன் டீ செய்து குடித்தப் பின்னர், அதில் இருக்கும் இலையை உதட்டில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கழுவினால், உதடுகள் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கும்.
உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, ஆலிவ் எண்ணெய்யுடன், சர்க்கரையை கலந்து, அதனை உதட்டில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து 1 அல்லது 2 வாரங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது எப்போது உதடுகள் வறட்சியடையாமல் இருக்கிறதோ, அப்போது அதனை செய்யாமல் விடலாம்.
தக்காளியின் பேஸ்ட்டை, மில்க் கிரீமுடன் கலந்து உதட்டிற்கு தடவினால், உதடுகள் மென்மையாவதோடு, பிங்க் நிறத்தையும் அடையும்.
உதடுகள் பிங்க் நிறத்தில் வேண்டுமென்றால், ரோஸ் இதழ்களை, மில்க் கிரீமுடன் கலந்து தடவினால், உதடுகளுக்கு எப்போதும் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
பாதாமை நன்கு பேஸ்ட் செய்து அதனை உதட்டிற்கு தடவி வந்தாலும் உதடுகள் மென்மையடையும்.
ஈரப்பதமான உதட்டைப் பெற, தேங்காய் எண்ணெய்யுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் மெழுகை ஊற்றி காய வைத்து, அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு, அந்தக் கலவையை தடவினால், உதடுகள் மென்மையாக இருக்கும்.
தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தான் உதடுகள் வறட்சியை அடைகின்றன. மேலும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நன்கு உண்ண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



