இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 38
சென்ற வாரம் ராஜ்புத் குளியல் பவுடர் மற்றும் வெட்டிவேரின் மகத்துவம் குறித்து குறிப்பிட்டிருந்தோம். இதனை படித்த நிறையபேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது பற்றி விசாரித்தனர். சிலர் நேரிலும் வந்தனர். அதில் குறிப்படத்தக்க ஒருவர் கடலூரில் இருந்து வந்திருந்தார். அவர் தனது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டதால், டாக்டர் சோப்பு போட்டு குழந்தையைக் குளிக்க வைக்கக் கூடாது என்று கூறியதால், என்ன செய்வதென்று யோசித்தோம். அந்த சமயத்தில்தான் உங்களது ராஜ்புத் குளியல் பொடியைப் பற்றி செய்தி தாளில் படித்து வந்தேன்'' என்றார்.
அதுபோன்று சாத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஆர்கானிக் பெருங்காயம் தயாரிப்பு பயிற்சி எடுத்துக் கொள்ள வந்திருந்தார். அவர், கோழி பண்ணை வைத்திருப்பதாகவும் , அது நல்ல லாபகரமான தொழிலாகவும் இருப்பதைப் பற்றி விளக்கினார். மேலும், அவர் கூறியது, அவர்கள் பகுதியில் கண்வலி கிழங்கு ( செங்காந்தல்), நித்யகல்யாணி, அவுரி இலை ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படு
வதாகவும், அவை மருத்துவ குணம் நிறைந்தவை. இந்த பயிர்களுக்கு உள்ளூரில் நல்ல விலை கிடைப்பதில்லை. அதனால், இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அவர்கள் பயிர் செய்யும் போதே ஏக்கருக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து விடுகிறார்கள். அது எங்களுக்கு பெரிய லாபம் தருவதில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்பதால் விற்றுவிடுகிறோம்'' என்றார்.
இதன் மகத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து அதன் பயனை நம் நாட்டவர் பெற வேண்டும் என்கிற அவரின் ஆர்வம் என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்கியது. மேலும், விவசாயிகள் இதுபோன்ற மாற்று பயிர்களையும் பயிரிடலாமே என்ற எண்ணமும் தோன்றவே, இதனை இங்கு பதிவு செய்ய நினைத்தேன்.
இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது இயற்கை பற்பொடி செய்வது. இதை சில மாதங்களுக்கு முன்பு நான் தற்சார்பு இயக்கம் நடத்திய இயற்கை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டபோது, கற்றுக் கொண்டது. மிகமிக உபயோகமான ஒன்று இது. , மேலும் இதை உபயோகித்தால் பல் சொத்தை, பல் கூச்சம், ஈறு வீக்கம் என எவ்வித பிரச்னையும் வராது . இதனை வீட்டிலேயே எளிய முறையில் குறைந்த செலவில் தயாரித்து விற்பனை செய்யலாம். அதற்குமுன்பு நான் எப்பவும் சொல்வது போன்று , முதலில் உங்கள் வீட்டு பயன்பாட்டுக்கு தயார் செய்து உபயோகப்படுத்தி, பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாம். படிப்படியாக இதை வியாபாரமாக்கலாம். இதனை வியாபாரமாக செய்வதால் நல்ல லாபமும், நல்லதொரு பொருளை மக்களுக்கு விற்பனை செய்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.
இயற்கை பற்பொடி செய்ய தேவையானவை:
கடுக்காய் - 100 கி
தான்றிக்காய் - 100 கி
நெல்லிவற்றல் - 100 கி
வால் மிளகு - 150 கி
கிராம்பு - 20 கி, ஏலக்காய் - 10 கி
இந்து உப்பு -20 கி
நாயுருவி வேர்-20 கி
நெல் உமி - 20 கி, எள்ளு - 10 கி
துளசி - 20 கி, புதினா - 20 கி
செய்முறை: கடுக்காய், தான்றிக்காய் இரண்டையும் விதை நீக்கி தோலை எடுத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காயவைத்து, பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்தால், இயற்கை பல்பொடி தயார்.
- ஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



