பெங்களூரை சேர்ந்த கதக் நடன கலைஞரான சிம்ரன் கோத்வனி, அண்மையில் போர்ச்சுகல் நாட்டில் மில்ஹடா என்ற இடத்தில் நடந்த அழகிப்போட்டியில் 2018-ஆம் ஆண்டுக்கான "மிஸ் லேடி ஸ்டார் யூனிவர்ஸ்' விருதை பெற்றுள்ளார். ஏழு நாட்கள் நடந்த இந்த போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், பெல்ஜியம், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், லித்வானியா, போர்ச்சுகல் உள்பட 24 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் சிம்ரன் கோத்வனி வெற்றிப் பெற்றதில் என்ன சிறப்பு ?
திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாய் ஆனவர் இவர், கதக் நடன கலைஞரான இவர், இந்த விருதைப் பெற ஆறுமாதங்கள் உடல் தகுதி, ஆடை மற்றும் சிகை அலங்காரம், அறிவுத் திறனுக்கான கேள்வி- பதில் போன்றவைகளில் தன் திறமையை காட்ட கடினமான பயிற்சிகளை மேற்கொண்டாராம். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:
"நான் போட்டியில் கலந்து கொள்ள போர்ச்சுகல் சென்றிருந்தபோது அங்கு கடும் குளிராக இருந்தது. ஏற்கெனவே நான் பெங்களூரில் வசித்து வந்தாலும் அந்த குளிரை என்னால் தாங்க முடியவில்லை. ஏழுநாட்கள் வெளிப்புறத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டபோது அழுகையே வந்துவிட்டது. போட்டியும் மிக கடினமாக இருந்தது. இறுதியில் போட்டியில் வெற்றிப்பெற்ற "மிஸ்லேடி ஸ்டார் யூனிவர்ஸ்' என்ற மகுடத்தை என் தலையில் வைத்தபோது என் கடினமான பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதினேன்.
உண்மையான மகிழ்ச்சியுடன், ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்த்தேன். திருமணமான ஓர் இந்தியப் பெண் முதன்முறையாக இந்த விருதை இந்தியாவுக்காக வாங்கினேன் என்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் சிம்ரன் கோத்வனி.
இதுபோன்ற அழகி போட்டியில் பங்கேற்பது சிம்ரனுக்கு புதிதல்ல ஏற்கெனவே இவர் "திருமதி இந்திய - தேசிய மகாராணி' அழகி போட்டியிலும் முதலாவதாக வந்துள்ளார். இதுதவிர நகை, அழகு சாதனங்கள் போன்ற பல சிறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தேசிய இயக்குநர்கள் அஞ்சனா மற்றும் காரி மாஸ்கரன்ஹஸ் ஆகியோர்தான் இந்தியா சார்பில் இவரை போர்ச்சுகலில் நடந்த சர்வதேச அழகி போட்டிக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்தார்களாம். போட்டியில் அணிவதற்கு தேவையான உடைகளை பெங்களூரில் உள்ள பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞர்கள் உருவாக்கி தந்துள்ளனர். அவரவர் நாட்டு கலாசாரப்படி உடையணியும் போட்டியில் இவர், தன் திருமணத்திற்காக இவரது அம்மா எடுத்துக் கொடுத்த புடவையை அணிந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
"இரு குழந்தைகளுக்கு தாயான பின், அழகிப்போட்டியில் நான் இந்த விருதை பெற்றிருப்பது, இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ளலாமா என்ற கனவில் உள்ள திருமணமான பெண்களுக்கு தூண்டுதலாக அமையுமென கருதுகிறேன். தன் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் போட்டிகளில் பங்கேற்க பெண்கள் முன்வர வேண்டும். இதனால் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்'' என்கிறார் சிம்ரன் கோத்வனி.
- அ.குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை

ராக்கெட் வெடித்து ப்ளூ ஆரிஜின் ஏவுதளம் சேதம்
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


