திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

எலும்புகள் தேயாமல் தடுக்க 10 வழிகள்!

நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம், வைட்டமின் டி, தவிர மக்னீசியம் சத்தும் மிகவும் தேவை.எனவே சிறு வயது முதற்கொண்டே நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

News image
Updated On :31 ஜனவரி 2019, 5:26 am

* நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம், வைட்டமின் டி, தவிர மக்னீசியம் சத்தும் மிகவும் தேவை.எனவே சிறு வயது முதற்கொண்டே நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
* குழந்தைகள் குறிப்பாக வளரும் பெண் குழந்தைகள் அதிகமாக சோடா, கோலா பானங்கள் பருகுவதால் அவர்களது எலும்புகள் உருவாகும் போதே மிகவும் வலு குன்றிவிடுகின்றன எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* ஒரு பெண் வயதுக்கு வரும் பருவத்தில் நல்ல போஷாக்கும் கால்சியம் சத்தும் அவசியம் தேவை. இல்லையெனில் நாற்பது வயதிற்கு மேல் அவளது எலும்புகள் எளிதில் உடையும் ஆபத்து உண்டு.
* தற்காலத்தில் எல்லோரும் பிளாட்களில் வசிப்பதாலும், வெயிலில் அதிகம் வராததாலும் வைட்டமின் டி குறைந்து ஞநபஉஞடஅதஅநஐந என்னும் எலும்பு சம்பந்தமான நோய் வயதான பெண்களுக்கு ஏற்படுகிறது.
* வயது ஏற, ஏற குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு அதிக அளவில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் கொடுப்பது எலும்புகளுக்கு வலுவூட்டும்.
* சுண்ணாம்புச் சத்து எளிதில் கிடைக்க ஒரே வழிதான் வெற்றிலை போடும் பழக்கம் என்றால் அது மிகையில்லை.
* எந்த வயதானாலும் நாம் ஓடியாடி சுறுசுறுப்பாக இருந்தால் எலும்புகளும் தசைநார்களும் வலுவாக இருக்கும்.
* அதிகமாக பழச்சாறுகள் சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்களில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சிவிடும்.
* நாற்பது வயதிற்கு பிறகு நமது எலும்புகளின் வலுவை BONEDENSITOMETRY. என்ற பரிசோதனை செய்து கண்டுபிடித்து தேவையான கால்சியம் கொடுப்பதால் எலும்பு முறிவுகளைத் தவிர்க்கலாம்.
* வயதான பெண்களுக்கு உடம்பில் ஈஸ்ட்ரோஜன் சத்துக் குறைபாடு இருந்தாலும் எலும்பு வலு குன்றும். ஆகையால் அவர்களுக்கு "ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன்' (HRT) மாத்திரைகள் கொடுப்பது நலம் தரும்.
"நலம் தரும் மருத்துவம்' என்ற நூலிருந்து
- சி.பன்னீர்செல்வம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.