ஒரே ஆண்டில் இரண்டு தங்கம்!
துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் அபூர்வி சந்தேலா. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி களேபரத்தில் இந்த வெற்றி செய்தி அமுங்கிவிட்டது.


துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் அபூர்வி சந்தேலா. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி களேபரத்தில் இந்த வெற்றி செய்தி அமுங்கிவிட்டது. ஜெர்மனியில் நடந்த போட்டியில்தான் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை அபூர்வி இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்த வெற்றி அபூர்விக்கு ஒலிம்பிக்ஸ் செல்லும் இந்தியக் குழுவில் இடம் பிடித்து தந்துள்ளது. அபூர்வியின் வெற்றியுடன் இந்தியக் குழுவின் வெற்றியும் சேர, இந்தியா சீனாவை துப்பாக்கி சுடுதலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அபூர்வி இந்த ஆண்டு டில்லியில் நடந்த உலகப் போட்டியிலும் பத்து மீ தூரத்தில் குறி நோக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். ஆக, அபூர்விக்கு ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்கள்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...