எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்!

தேங்காய் எண்ணெய்யில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களைப் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்,

News image
Updated On :21 மார்ச் 2019, 12:05 pm IST

முடி வளர:
  தேங்காய் எண்ணெய்யில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களைப் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாகவும் நீண்டும் வேகமாக வளரும்.
  மருதாணி இலையை நன்கு மைப்போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு தேக்கரண்டியும் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியைப் போடுவதற்கு முன், தலையில் எண்ணெய்ப் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
  தேங்காய் எண்ணெய்யில் மருதாணிப் பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
  கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
 பொடுகை தவிர்க்க:
  வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத் தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
  வேப்ப இலை மற்றும் துளசி இலையைப் பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
 நரைமுடி கறுப்பாக:
  நரைமுடி கறுப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அதனை அடிக்கடி சாப்பிடுங்கள்.
  நெல்லிக்காயை காயவைத்து, பவுடராக்கி, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கறுப்பாகும்.
 முடி உதிர்வதை தடுக்க:
 
 வெந்தயம் மற்றும் குன்றிமணியைப் பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 முடி பளபளப்பாக:
  அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கறுப்பாக, பளபளப்பாக இருக்கும்.
  5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்க முடி கறுப்பாகி மினுமினுப்பாகும்.
 - கே.அஞ்சம்மாள், தொண்டி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.